Monday, April 1, 2013

கோதுமை ரொட்டி - WHEAT ROTI


தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப் 

துருவிய தேங்காய் பூ - 3 டேபிள் ஸ்பூன் 

உப்பு  -  தேவையான அளவு 

எண்ணெய் - 2 ஸ்பூன் 


செய்முறை  :
           கோதுமை மாவை ஒரு அகன்ற பத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

அதனுடன் தேவையான அளவு உப்பு  ,  துருவிய தேங்காயை சேர்த்து
 தண்ணீர்  ஊற்றி பிசைந்து (கொஞ்சம் இலவளகா ) வைக்கவும்.
 




 தோசைகல்லை அடுப்பில் வைத்து சூடு வந்த உடன் ( அடுப்பை சிம்மில்  வைத்து) சிறிது எண்ணெய் விட்டு பிசைந்த கோதுமை மாவை எடுத்து கையினால் தண்ணீர் தொட்டுக்கொண்டு லேசாக நமக்கு தேவையான  அளவில்  தட்டி விடவும்.

                                                                                                                                                         

சிறிது நேரத்திற்கு பின்  ஒருபுறம் சிவந்தவுடன், மறுபுறம் திருப்பி விடவும். தேவையெனில் சிறிது எண்ணெய் விடலாம் . 


 
வெந்தவுடன்   எடுத்து  பரிமாறலாம்.. சுவையான கோதுமை ரொட்டி ரெடி.


8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இதோ இப்போதே செய்து விடுகிறேன் என்றார்கள் வீட்டில்...!

நன்றி...

வை.கோபாலகிருஷ்ணன் said...

கோதுமை ரொட்டிப்படங்கள் + தயாரிப்பு விள்க்கங்கள் எல்லாமே அருமை. பாராட்டுக்கள்.

VijiParthiban said...

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சகோ, நன்றி ஐயா.....

Radha rani said...

அருமையான எளிமையான குறிப்பு.. அருமை.

மாதேவி said...

கோதுமை ரொட்டி நன்றாக இருக்கின்றது.

நாங்கள் மைதா மாவில் பச்சை மிளகாய்+ வெங்காயம் சேர்த்து இதேபோல செய்வோம்.

VijiParthiban said...

வருகைக்கு மிக்க நன்றி தோழி...

Mahi said...

வித்யாசமான ரெசிப்பியாக இருக்கு, இதற்கு சட்னி சாம்பார் ரெண்டுமே மேட்ச் ஆகுமா?

VijiParthiban said...


ரொட்டிக்கு சட்னி, சாம்பார், ஜீனி, அல்லது வெறுமன ( தேங்காய் சுவையால் ) சாப்பிடவும் நல்லா இருக்கும். நன்றி தோழி