Tuesday, April 30, 2013

ரவா கேசரி - Rava Kesari





தேவையான பொருட்கள் :

ரவா - 1 டம்ளர்
தண்ணீர் - 4 டம்ளர்
சக்கரை   - 1 1/2 டம்ளர் (1)
திராட்சை - 12
முந்திரி பருப்பு - 8
நெய் - 5 டீஸ்பூன்
ஏலக்காய் - 3
கலர் பவுடர் - சிறிது
உப்பு - 1/4 டீஸ்பூன் 

செய்முறை:


ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்கவைக்கவும். கொதித்தபின் வருத்த ரவையை  சேர்க்கவும் கட்டிபடாமல் கிளறிவிடவும் . சிறிது உப்பு சேர்க்கவும் . தீ மிதமான பதத்தில் இருக்கட்டும்.


ரவை  நன்றாக சுருண்டு வெந்தவுடன் சர்க்கரையை  சேர்த்து கிளறவும் அதனுடன் ஏலக்காய் பொடி , சிறிது  கலர் பவுடர் ( சிறிது சுடு நீரில் கரைத்து சேர்க்கவும் ) நன்றாக கிளறி விடவும்.

 

கடாயில் நெய்விட்டு முந்திரி, திராட்சையை பொரித்து அதனுடன் சேர்த்து கிளறிவிட்டு இறக்கி வைக்கவும். இறக்கிவைத்து பரிமாறலாம் சுவையான இனிப்பான கேசரி ரெடி.

 

கேசரி ஆறியபின்னரே மிகவும் சுவையாகவும், எடுத்து சாப்பிட
அருமையாகவும்   இருக்கும். வாங்க எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக ரவா  கேசரி ரெடி .

குறிப்பு :

கலர் பொடியை  சிறிது சுடு நீரில் கரைத்து சேர்க்கவும் அல்லது தண்ணீர் கொதிக்கும் பொழுது சேர்க்கவும். தூவினால் திட்டு திட்டாக இருக்கும்.





10 comments:

Angel said...

கேசரி கலர்புல்லா இருக்குங்க விஜி ....உங்கள் முறைப்படி செய்து பார்க்கிறேன்

VijiParthiban said...

உடன் வருகைக்கும் , கருத்திற்கும் மிக்க நன்றி அக்கா.. செய்து பாருங்க நல்லா இருக்கும். ஆறியவுடன் சூப்பர்...

எனக்கு பிடிக்கும் என்பதால் மூன்று நாட்களுக்கு வைத்து சாப்பிடுவேன்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

கேசரி பார்க்கவே சூப்பராக கேசரிக்கலரில் உள்ளது.

நாக்கில் ஜலம் ஊறுகிறது.

பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

கேசரியுடன் கூடவே பஜ்ஜி + காஃபி வேண்டும். ;)

VijiParthiban said...

உடன் வருகைக்கும் , கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா...

VijiParthiban said...


//கேசரியுடன் கூடவே பஜ்ஜி + காஃபி வேண்டும். ;)

ம்ம்ம் ஆமாம் ... அடுத்த முறை தந்துவிடுகிறேன் ஐயா...

திண்டுக்கல் தனபாலன் said...

கலரே இழுக்கிறது...

செய்முறை குறிப்பிற்கு நன்றி சகோதரி...

கோமதி அரசு said...

ரவா கேசரி அழகாய் இருக்கிறது.
ருசியும் அருமையாக இருக்கும்.

Mahi said...

Kesari looks delicious! I use just 2 cups of water for 1 cup rava. Your measurement is lil different!

Asiya Omar said...

கேசரி சூப்பர்.கலர் வா வா ,சாப்பிடு சாப்பிடு என்று அழைக்கிறது விஜி.

yathavan64@gmail.com said...

அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (29/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE