தேவையான பொருட்கள்:
அவல் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
காய்ந்த/பச்சை மிளகாய் - 3
ஜீனி - 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிது
செய்முறை:
முதலில் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும், மிளகாய் கிள்ளி போடவும், கறிவேப்பிள்ளை வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதேநேரத்தில் அவலில் தண்ணீர் ஊற்றி வடிகட்டவும் ( வடிகட்டிய பின் சிறிது தண்ணீரில் 2 நிமிடம் ஊறட்டும் ) .
வெங்காயம் வதங்கியவுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி விடவும். பின் ஊறிய ( வடிகட்டிய ) அவுலை சேர்த்து கிளறிவிடவும். பின் சீனியை தூவி பிரட்டி இறக்கி மல்லிதழை சேர்த்து பரிமாறலாம். அவல் உப்மா ரெடி.
குறிப்பு:
அவல் கழுவி வடிகட்டும் போது அதிகம் தண்ணீர் இருக்க வேண்டாம் . அவல் ரொம்ப கொழகொழப்பாக ஆகிவிடும்.
அவல் பயன்கள்:
- அவல் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
- அவலை ஊறவைத்து காலையிலும் , மாலையிலும் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும் .
11 comments:
ஈஸி அன்ட் டேஸ்டி உப்புமா!
Super upma.
Love this in all lazy days !
http://recipe-excavator.blogspot.com
ருசியான அவல் உப்புமா மிக்வும் அருமை. ப்ட்ங்களும் அழகு.
என் வீட்டில் அடிக்கடி செய்யப்படும் ஓர் டிபன் தான் இது.
செய்முறை விளக்கங்களுக்கு நன்றி.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
சுவையான ஃடிபன் ஐட்டம்... குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்...
செய்முறைக்கு நன்றி...
வாழ்த்துக்கள்...
நன்றி தோழி.... ஆமாம் மகி .....
Welcome vanathi .... thanks for your comments.
Welcome sangeetha nambi thankyou.... yaa...
பாராட்டுகளுக்கும் விரிவான கருத்துக்கு மிக்க நன்றி ஐயா....
பாராட்டுகளுக்கும்,கருத்துக்கு மிக்க நன்றி சகோ...
அவல் உப்புமா நான் தக்காளி சேர்த்து செய்வேன். உங்கள் செய்முறையும் அருமை.
Post a Comment