Wednesday, April 3, 2013

வாழைக்காய் பொடிமாஸ் - PLANTAIN POTIMAS

தேவையான பொருட்கள்:
வாழைக்காய்  -  2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
சோம்பு - 1/2 ஸ்பூன் 
கடுகு - 1 ஸ்பூன்  
கருவேப்பிலை - சிறிது 
எண்ணெய் - 2 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
கொத்தமல்லி இலை - சிறிது 



செய்முறை: 


           தோல் நீக்கிய   வாழைக்காயுடன்  தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து   பிசைந்து வைக்கவும்.  வெங்காயத்தை 
பொடியாக நறுக்கிகொள்ளவும். பச்சை மிளகாயை நீட்டுவாக்கில் வகுந்து வைத்து , சோம்பு  நுனிக்கிகொள்ளவும்.



கடாயில் எண்ணெய் விட்டு சூடான பின் கடுகு, நுனிக்கிய  சோம்பு போட்டு பொரிந்த பின் கருவேப்பிலை சேர்க்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் உப்பு சேர்த்து  பிரட்டி விடவும்.  பின்னர்  வேகவைத்து பிசைந்து வைத்துள்ள வாழைக்காயை  சேர்த்து நன்றாக பிரட்டி விடவும். 










அடுப்பை மிதமான சூட்டி வைத்து சிறிது நேரம் பிரட்டி விட்டு இறக்கவும் .  வாழைக்காய்  பொடிமாஸ் ரெடி


வாழைக்காயின் மருத்துவ பயன்கள்:
 
  • வாழைக்காய் அதிகம் சத்துள்ளதால்  உடல் பருமன் அடையும்.

  •  வாழைக்காயில் மாவுச்சத்து, இரும்புச்சத்து  இருக்கிறது. அதனால் நல்ல வளர்ச்சிக்கும் உதவும்.

  • வாழைப்பழம், வாழைக்காய் சாப்பிட்டால் பசி அடங்கும் .

  •  வாழைக்காயில் மேல் தோல் எடுத்துவிட்டு உட்புறத் தோலுடன் சமைத்து உண்பதனால் தோலிலுள்ள சத்துக்கள் நம் உடலில் சேரும்.


  • வாய்வு தொல்லை இருப்பவர்கள் வாழைக்காய் சாப்பிடுவதை குறைத்துக்கொள்வது நல்லது.   

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பொடி மாஸ் சூப்பர்...

விளக்கமான வாழைக்காயின் மருத்துவ பயன்களுக்கு நன்றி...

வை.கோபாலகிருஷ்ணன் said...

வாழைக்காய் பொடிமாஸ் பற்றிய படங்களும் விளக்கக்களும் மிகவும் அருமை.ருசிமிக்க் பதிவுக்கு நன்றிகள்.

Sangeetha Nambi said...

Super tempting... Well goes with kaara kuzhambu....
http://recipe-excavator.blogspot.com

Priya ram said...

வாழைக்காய் பொடிமாஸ் அருமை...

VijiParthiban said...

விரிவான கருத்துக்கு மிக்க நன்றி சகோ..

VijiParthiban said...

மிக்க நன்றி ஐயா....

VijiParthiban said...

ஆமாம்....வாங்க சங்கீதா கருத்திக்கு மிக்க நன்றி...

VijiParthiban said...

வருகைக்கு மிக்க நன்றி ப்ரியா...

Asiya Omar said...

சூப்பர் பொடிமாஸ்..நல்ல பகிர்வு.

VijiParthiban said...

வருகைக்கு மிக்க நன்றி ஆசியா அக்கா ...

Jaleela Kamal said...

வாழ்க்காய் பொடிமாஸ் ரொம்ப நல்ல இருக்கு

கோமதி அரசு said...

வாழிக்காய் பொடிமாஸ் , மற்றும் வாழைக்காய் மருத்துவ பயன்களும் அருமை.