Thursday, October 11, 2012

விநாயகர் சதுர்த்தி

மும்பையின் முக்கியமான திருவிழா விநாயகர் சதுர்த்தி

  விநாயகர் சதுர்த்தி மும்பையில் மிகவும் சிறப்பாகவும் செம்மையாகவும் கொண்டாடப்படும்.  பார்ப்பதற்கு  மிகவும்   மகிழ்ச்சியாகவும் வண்ணமயமாகவும் இருக்கும். ஆமாம் தெருக்களில் இருபுறங்களிலும் வண்ணவண்ண மின்விளக்குகளால்  அலங்கரிக்கப்பட்டு இருக்கும். 




       வீடுகளிலும், தெருக்களிலும் கணபதியின் சிலைகள் வைக்கப்பட்டு இருக்கும். அதற்க்கு விநாயகர்  சதுர்த்தி  அன்று  (மோதகம் ) கொழுக்கட்டை செய்து , பழங்கள் எல்லாம் வைத்து பூஜை செய்வார்கள். அன்றிலிருந்து   பூஜைகள்   ஒவ்வொரு  நாளும்   கொண்டாடப்படும்  
( பதினொன்று நாட்கள் நடக்கும் ).



      பின்னர் அவரவர்  வழக்கப்படி ஒன்றரை நாள், மூன்றாம் நாள், ஐந்தாம் நாள், ... பதினொன்றாம் நாள்  என்று விநாயகர் சிலைகளை  எடுத்துகொண்டு போகும் பொழுது பாட்டு பாடி,  தெருக்களில் குத்தாட்டம் போட்டுக்கொண்டு சென்று கடலில் , அல்லது செயற்கை குளங்களில் கரைப்பார்கள். அப்பொழுது சிறுவர்கள் முதல், பெரியவர்கள் வரை ஆட்டம் போட்டு கொண்டும் " கணபதி பாப்பா - மோரியா , மங்கள்மூர்த்தி - மோரியா " என்று கூறிக்கொண்டும் சென்று வருவார்கள்.




     நமக்கு பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும். தினமும் மக்கள் அனைவரும் ஒவ்வொரு கணபதியையும் சென்று தரிசித்து வருவார்கள். மிக நன்றாக  இருக்கும் .



 ஆமாம்  மும்பையில் பதினோரு நாட்கள் திருவிழாக் கோலமாக மிகவும் சிறப்பாகவும் அனைவராலும் வரவேற்க்ககூடிய திருவிழா விநாயகர் சதுர்த்திதான். இதனை சியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வரவேற்று காற்று இருக்கும் விழா... 











  இந்தமுறையும் வெகு சிறப்பாக நடைப்பெற்றது...... அடுத்தது வரவேற்க கூடிய விழா நவராத்திரி இதுவும் சிறப்பாக கொண்டாடுவார்கள்.....