Wednesday, September 5, 2012

உருளைக்கிழங்கு பொடி மாஸ் - POTATO PODIMAS



தேவையான பொருட்கள்:

உருளைகிழங்கு  - 150 கிராம் 
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2

சோம்பு - 1/2 ஸ்பூன் 
கடுகு - 1/2 ஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1/4 ஸ்பூன் 
கருவேப்பிலை - சிறிது 
எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 


செய்முறை: 

உருளைக்கிழங்கை தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து எடுக்கவும்.  தோல் நீக்கி நன்றாக பிசைந்து வைக்கவும். 

வெங்காயம்,பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிகொள்ளவும். சோம்பு நன்றாக நுனிக்கிகொள்ளவும்.




 கடாயில் எண்ணெய் விட்டு சூடான பின் கடுகு, உளுத்தம் பருப்பு, தட்டி வைத்துள்ள சோம்பு போட்டு பொரிந்த பின் கருவேப்பிலை சேர்க்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி விடவும்.  பின்னர்  வேகவைத்து பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக பிரட்டி விடவும். 

அடுப்பை மிதமான சூட்டி வைத்து சிறிது நேரம் பிரட்டி விட்டு இறக்கிவிடவும். உருளைக்கிழங்கு  பொடி மாஸ் ரெடி



குறிப்பு: உருளைக்கிழங்கை தோல் நீக்கியும்  வேகவிடலாம், அப்படியே வெந்தபின்னும் தோழுரிக்கலாம் .


மருத்தவ பயன்கள்:

  • உருளைக்கிழங்கு இரத்த அழுத்தத்தை குறைக்கும்.  உடல் எடையையும் குறைக்கும். ( சமநிலையில் வைக்கும் )  .

  • நன்மைபயக்கும் பாக்டீரியாக்களை நம் உடலில் அதிகமாக்கும் தன்மை கொண்டது. அதனால் எளிதில் ஜீரணமாகும். உருழைக்கிழங்கு நமக்கு பல வகையில் நல்லது.

  • குறிப்பாக உருளைக்கிழங்கை எண்ணெயில்லாமல் ( குறைவான எண்ணெயில் )  உபயோகிப்பது நல்லது.