Saturday, April 27, 2013

அன்னாசிப் பழ கேசரி - PINEAPPLE KESARI





தேவையான பொருட்கள் :

ரவா - 1 கப் ( வறுத்தது )
ஜீனி - 3/4 கப்
அன்னாசிப்  பழம் - 1 கப்  ( பொடியாகா   நறுக்கியது )
முந்திரி பருப்பு - 6
உலர் திராட்சை -7
தண்ணீர் - 3 கப்
நெய் - 3 டீஸ்பூன் 

செய்முறை:

 நான்ஸ்டிக் பானில் தண்ணீர் ஊற்றி அடிப்பில் வைத்து கொதிவந்தவுடன் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ரவாவை  லேசகா தூவிகொண்டே  கிளறிவிடவும்  ( கட்டிபடாமல் ). ஓரளவு ரவை வெந்து வந்தவுடன் ஜீனியை கொட்டி கிளறவும்.



பின் அதனுடன் நறுக்கிய அன்னாசிப் பழத்தை சேர்த்து கிளறிவிடவும். நன்றாக வெந்தவுடன்  ( சிறிதுநேரத்தில் ) இரண்டு  ஸ்பூன் நெய் விட்டு கிளறவும்.



பின் தனியாக ஒரு  டீஸ்பூன் நெய்விட்டு முந்திரி , திராட்சை பொரித்து அதனுடன் கலந்து விடவும். அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு சுவையான அன்னாசிப்  பழ கேசரி ரெடி.





 இனிப்புடன் அன்னாசி பழ சுவை சேர்ந்து மிகவும் அருமையான கேசரி தயார்.


குறிப்பு:

அன்னாசிப்பழ சுவைக்கு ஏற்றவாறு இனிப்பு சேர்த்துக்கொள்ளவும். கலர் தேவையெனில் சேர்த்துக்கொள்ளலாம். அன்னாசி பழத்தை அரைத்தும் செய்யலாம்.

4 comments:

இமா க்றிஸ் said...

சூப்பரா இருக்கும் என்கிறது பார்க்கவே தெரியுது விஜி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

படத்தில் பார்த்தாலே நாக்கில் நீர் ஊறுவதாக உள்ளது. அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

அன்னாசிப் பழகேசரி ருசியாக இருக்கிறது.

Asiya Omar said...

அன்னாசிப்பழ கேசரி பார்க்கவே சூப்பர்.படங்கள் மிக அழகு.