தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 100 கிராம்மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் (அல்லது) தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை கழுவி தோல் நீக்கி ( அல்லது) தோலுடன் சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் கொஞ்சம் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை பொரிந்த பின்னர் நறுக்கிய உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
பின் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும் மிதமான சூட்டில் இருப்பதே நல்லது. பின்பு கொஞ்சம் தேவைப்பட்டால் எண்ணெய் லேசாக சேர்த்து வதக்கலாம். கிழங்கு வெந்தவுடன் (வதங்கியவுடன்) இறக்கி விடலாம். மிக மிக ஈசியான உருளைக்கிழங்கு வறுவல் ரெடி.
சாம்பார் சாதம், தயிர் சாதம், பீட்ரூட் சாதம் என்று அனைத்திற்குமே காரசாரமாக இருக்கும்.
7 comments:
தயிர் சாதத்திற்கு மிகவும் நல்லா இருக்கும்... நன்றி...
Perfect side dish for any rice! Looks good Viji!
எனக்கு மிகவும் பிடித்தமான ருசியான உருளைக்கிழங்கு வறுவல். ருசியான பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த் உருளை பொரியல்.
படங்கள், செய்முறை அருமை விஜி.
சூப்பராக செய்திருக்கீங்க விஜி,அதுவும் ஸ்டெப் படங்களுடன் பகிர்வு அருமை.
அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி... நன்றி...
இடியப்பத்திற்கு நன்றாக இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த உணவு
Post a Comment