அவரைக்காய் -150 கிராம்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
கடுகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் அவரைக்காயை கழுவி சுத்தம் செய்து சிறிது சிறிதாக
நறுக்கிகொள்ளவும். அதேபோல் வெங்காயத்தையும் நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு பொரிந்ததும், கடலைப்பருப்பு போடவும், காய்ந்தமிளகாய் கிள்ளி போட்டு சிவந்த பின் வெங்காயம், கருவேப்பிலை , சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின்னர் அவரைக்காயை சேர்த்து வதக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சநேரம் வதக்கவும். பின்னர் அடுப்பை குறைந்த தீயில் வைத்து, மூடி போட்டு வேகவிடவும் இரண்டு , மூன்று முறை பிரட்டி விட்டு
( அடி பிடிக்காமல் ) வேகவிடவும். வெந்தவுடன் இறக்கி பரிமாறலாம். அவரைக்காய் பொரியல் ரெடி.
அவரைக்காய் பொரியலில் நான் தண்ணீர் சேர்க்கவே இல்லை .விரும்பினால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம் .
கடலைப்பருப்பு எண்ணெய்யில் பொறிந்து இருப்பதால் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.
அவரைக்காயின் பயன்கள்:
- அவரைக்காய் எளிதில் ஜீரணமாகும் தன்மை உள்ளதால் இதன் சத்துக்கள் விரைவில் நம் உடலில் சேரும்.
- இதில் துவர்ப்பு தன்மை உள்ளதால் இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்த நாளங்களிலுள்ள கொழுப்பைக் குறைக்கும் .
- அவரைக்காயை அதிகம் உணவில் இதய நோய், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சேர்த்துக்கொள்வது மகவும் நல்லது....
9 comments:
அவரைக்காய் பொரியல் படமும் செய்முறை விளக்கமும் அருமையாய் உள்ளது.
பாராட்டுக்கள்.
அவர் சாப்பிட வேண்டி, அவரை நினைத்து செய்ததால், அவரைக்காய் என பெயர் பெற்றிருக்குமோ இந்தக்காய்? ;)))))
பயனுள்ள குறிப்பும், VGK ஐயா அவர்களின் குறும்பும் அருமை...
நன்றி...
உடன் கருத்துக்கும், எழுத்து நடைக்கும் மிக்க நன்றி ஐயா, நன்றி சகோ.
சுலபமான எளிய குறிப்பா இருக்கு விஜி.. நல்லா இருக்கு.
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி அக்கா
இலகுவான சுவையான பொரியல்.
நான் மஞ்சள்தூள் அல்லது சிறிதளவு மிளகாய்பொடி கலப்பேன்.
இறக்கும்போது சிறிதளவு தேங்காய்துருவல் சேர்த்தால் சுவை யாக இருக்கும்.
மிக்க நன்றி மாதேவி ... ஆமாம் தேங்காய் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்....
எனக்கு மிகவும் பிடித்த காய் அவரைக்காய், ஆனால் இங்கே இந்தக் காயைப் பார்ப்பதே குதிரைக் கொம்பு! நாங்களும் தேங்காய் போட்டுதான் பொரியல் செய்வது வழக்கம்!
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி....
Post a Comment