Saturday, May 12, 2012

உருளைக்கிழங்கு வறுவல் - POTATO FRY

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு  - 2
மஞ்சள் தூள்      -  1/2 டீஸ்பூன் 
உப்பு                 -  தேவையான அளவு 
மிளகாய் தூள்  - 1 டேபிள்ஸ்பூன் 
பூண்டு        -  5 பல் 
கறிவேப்பிலை - சிறிது 
கடுகு          -  1  டீஸ்பூன் 
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் 


செய்முறை :

                முதலில்   உருளைக்கிழங்கை   தண்ணீரில்    போட்டு 
வேகவைத்துகொள்ளவும் . வெந்த கிழங்கை தோல்நீக்கி வறுவலுக்கு  ஏற்றபடி  நறுக்கி வைக்கவும். 



               நறுக்கிய கிழங்குடன்  மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, பூண்டு 
( பூண்டை நசுக்கி ( தட்டி ) )  இவை   அனைத்தையும்    சேர்த்து  பிசைந்து  வைக்கவும். 



             சிறிது நேரத்திற்கு பிறகு கடாயில்  எண்ணெய்   ஊற்றி 
சூடானபின் கடுகு போட்டு வெடித்ததும் கறிவேப்பிலை போடவும். 
பிறகு மசாலாபிரட்டிய உருளைக்கிழங்கை சேர்த்து மிதமான சூட்டில்  வேகவிடவும். 

           பிரட்டிவிட்டு சிறிதுநேரம் சூட்டில்  இருக்கட்டும் .வறுவலான பின் இறக்கிவிடவும். உருளைக்கிழங்கு வறுவல் ரெடி.






குறிப்பு : எண்ணெய் ஊற்றும் போது சிறிது சிறிதாக ஊற்றி உருளைக்கிழங்கை பிரட்டிவிடவும்.  

    சாம்பார் சாதம், ரசம் இவற்றுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு உருளைக்கிழங்கு வறுவல் மிகவும் அருமையாக இருக்கும் .


 



13 comments:

இராஜராஜேஸ்வரி said...

மிகவும் அருமையான
"உருளைக்கிழங்கு வறுவல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

Usha Srikumar said...

Lovely!!!
My favorite...

VijiParthiban said...

இராஜராஜேஸ்வரி அக்கா வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

VijiParthiban said...

மிக்க நன்றி உஷா அக்கா.

cookbookjaleela said...

mika arumai

VijiParthiban said...

வாங்க ஜலீலா அக்கா வருகைக்கு மிக்க நன்றி. நம் நட்பு மீண்டும் தொடரட்டும் .என்னுடைய வலைப்பூவின் உறவினராக வாருங்கள் அக்கா.

Asiya Omar said...

சூப்பர் சுவை.அந்த ப்லேட் எனக்கு.

VijiParthiban said...

மிக்க நன்றி ஆசியா அக்கா. இது உங்களுக்கே ........அக்கா.

நிரஞ்சனா said...

உருளைக் கிழங்கு எனக்கு ரொம்பப் பிடிக்கும் விஜி. சிம்பிளாச் சொல்லியிருக்கீங்க. நாஆஆஆனே செஞ்சு பாத்துடறதுன்னு முடிவு பண்ணிட்டேன். (பயப்படாதீங்க... உங்களுக்கு பார்சல் அனுப்பி தொல்லை பண்ண மாட்டேன்) நான் சமையல் கத்துக்க இனி குரு நீங்கதான்.

VijiParthiban said...

மிக்க நன்றி நிரஞ்சனா அவர்களே. உருளைக் கிழங்கு எனக்கும் ரொம்பப் பிடிக்கும். நீங்கள் செய்து பாருங்கள் அப்படியே எனக்கும் கொஞ்சம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்................பார்சல் கேட்கமாட்டேன் . எப்படி இருந்தது என்று மட்டும் சொல்லுங்க நிரஞ்சனா.

நிரஞ்சனா said...

ஹல்லோ... என் ப்ளாக்லயும் சரி இங்கயும் சரி... நிரஞ்சனா அவர்களேன்னு போட்டு என்னை பாட்டி மாதிரி ஃபீல் பண்ண வெக்கறீங்க... இனி நிரூ இல்லன்ன நிரஞ்சனான்னுதான் கூப்பிடணும். இல்லாட்டா... வருந்தி வருந்தி என் வீட்டுக்கு விருந்துக்கு கூப்ட்டு நானே சமைச்சுப் போட்டு டாக்டர் செலவு வெச்சிடுவேன் உங்களுக்கு... Ha... Ha...

VijiParthiban said...

அம்மாடியோயோயோயோயோயோயோ ............. எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை.


நான் இனிமேல் நிரூ என்று கூப்பிடுகிறேன் போதுமா நிரஞ்சனா.

VijiParthiban said...

நான் நிரூ விருந்திலிருந்து தப்பித்துவிட்டேன் அப்பாடாஆஆஆஆ.........