தேவையான பொருட்கள் :
கக்கரிக்காய் - 100 கிராம்
வெங்காயம் - 1
மிளகாய் வற்றல் - 2
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 1 டேபிள் டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் டீஸ்பூன்
முதலில் கக்கரிக்காயை கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம் நறுக்கி எடுக்கவும் . பின்பு தேவையான பொருட்கள்
அனைத்தையும் எடுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானபின் கடுகு
உளுத்தம்பருப்பு சேர்த்து பொரிந்ததும் காய்ந்த மிளகாயை
கில்லி போடவும். பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
கறிவேப்பிலை சேர்க்கவும்.
அதனோடு கக்கரிக்காயை போட்டு தேவையான அளவு உப்பு,
மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின் சிறிது நேரம் மூடிவைக்கவும்.
அந்த மூடியிலிருந்து வடியும் நீரே அது வேகுவதற்கு
போதுமானது. மூடியை எடுத்து விட்டு மறுபடியும் பிரட்டி விடவும்
இப்பொழு காய் வெந்துள்ளதா என்று பார்க்கவும்.வெந்ததும் இறக்கி அதன் மேல் தேங்காய் துருவல்,கொத்தமல்லி இலையை தூவி பரிமாறலாம்.
இப்பொழுது சுவையான கக்கரிக்காய் பொரியல் ரெடி.
இப்பொழுது சுவையான கக்கரிக்காய் பொரியல் ரெடி.
குறிப்பு:கக்கரிக்காய் தாளிக்கும் பொழுது 1 டேபிள்ஸ்பூன் கடலைபருப்பு
சேர்த்து கொண்டால் மிகவும் அருமையாக இருக்கும். கடலைபருப்பு
சேர்த்துகொண்டால் சிறிது தண்ணீர் தெளித்து விடவும்.
மருத்துவ பயன்கள் :
- கக்கரிக்காய் மிகவும் குளிர்ச்சி தண்மை கொண்டது. நம் உடலின் வெப்பத்தை அது குறைக்கும். பொதுவாக வெயில் காலங்களில் அதிகமாக நாம் உபயோகிக்க வேண்டும் .
- வெங்காயத்தை உள்ளங் கை, கன்னங்கள், வயிறு, குதி கால் போன்ற இடங்களில் தடவிக்கொண்டால் வெயிலில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படும் வெப்பத் தாக்கிலிருந்து தப்ப விடலாம் .
- வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம்.
- வெங்காயத்தில் உள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் இரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓடவைக்க உதவி செய்கிறது.
12 comments:
வெள்ளரிப்பிஞ்சு என்று தான் நாங்கள் எல்லோரும் சொல்லுவோம். நீங்கள் புதிதாக கக்கரிக்காய் எனச்சொல்லியுள்ளது வேடிக்கையாக உள்ளது. கேள்விப்பட்டதே இல்லை.
செய்முறைக் குறிப்புகள் அருமை.
பாராட்டுக்கள்.
விஜிம்மா! எல்லாக் காயும் விரும்பிச் சாப்பிடற நான், கத்தரிக்காயை மட்டும் அறவே சேர்க்க மாட்டேன். நீ ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா ‘கக்கரிக் காய்’ன்னு அடிச்சிருக்கேன்னு நினைச்சேன். சரியாத்தான் பண்ணியிருக்கம்மா. இந்த வார்த்தை எனக்குப் புதுசு. காய் பழசு.
நல்லதொரு சமையல் குறிப்புதான் இது. ஒவ்வொரு சமையல் குறிப்போடவும், அந்தந்தக காய்களால என்ன பயன்னு கீழ குறிப்புத் தர்றது அருமையான விஷயம் விஜி. விடாம இதைப் பண்ணு ஃப்ரெண்ட்!
கக்கரிக்காய் பெயர் புதுசு,பகிர்வு அருமை.போட்டோ சூப்பர்.
வெள்ளரிக்காயில் இது ஒருவகையானவை " CUCUMBER KAKDI " . இதனை எங்கள் கிராமத்தில் கக்கரிக்காய் என்றுதான் சொல்லுவது வழக்கம். இது பார்ப்பதற்கு மஞ்சள் கலந்த வெண்ணிறமாக இருக்கும் . இதன் தோல் தடிமனாக இருக்கும். இதில் லேசான துவர்ப்பு தன்மை காணப்படும். அதுமட்டுமல்ல வெள்ளரிக்காயில் ஒருவகை வட்டமாகவும் (LEMON CUCUMBER), இன்னொருவகை மிகவும் மென்மையாகவும் தோல் லேசாகவும் நீளவாக்கிலும் எளிதில் உண்ணக்கூடியதாகவும் இருக்கும். இது போன்று இன்னும் பல வகைகள் இருக்கின்றன (Garden cucumber, English cucumber, Japanese cucumber, Armenian cucumber, lemon cucumber ).
VGK அய்யா அவர்களே நாங்களும் வெள்ளரிக்காய் என்று சொல்லுவது உண்டு . ஆனால் இது வெள்ளரிக்காயில் ஒருவகை இதனை நாங்கள் கக்கரிக்காய் என்று சொல்லுவோம். இதில் ஒருவகையான கக்கரிக்காயை மருந்துகள் தயாரிப்பதற்கும் பயன்படுத்துவார்கள்.
எங்கள் கிராமத்தில் வெள்ளரிக்காய், கக்கரிக்காய் இரண்டுமே பயிர்செய்தோம் அய்யா.
தாங்களது கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அய்யா.
வெள்ளரிக்காயில் இது ஒருவகையானவை " CUCUMBER KAKDI " . இதனை எங்கள் கிராமத்தில் கக்கரிக்காய் என்றுதான் சொல்லுவது வழக்கம். இது பார்ப்பதற்கு மஞ்சள் கலந்த வெண்ணிறமாக இருக்கும் .
இதன் தோல் தடிமனாக இருக்கும். இதில் லேசான துவர்ப்பு தன்மை காணப்படும். அதுமட்டுமல்ல வெள்ளரிக்காயில் ஒருவகை வட்டமாகவும் (LEMON CUCUMBER), இன்னொருவகை மிகவும் மென்மையாகவும் தோல் லேசாகவும் நீளவாக்கிலும் எளிதில் உண்ணக்கூடியதாகவும் இருக்கும்.
இது போன்று இன்னும் பல வகைகள் இருக்கின்றன (Garden cucumber, English cucumber, Japanese cucumber, Armenian cucumber, lemon cucumber ).
VGK அய்யா அவர்களே நாங்களும் வெள்ளரிக்காய் என்று சொல்லுவது உண்டு . ஆனால் இது வெள்ளரிக்காயில் ஒருவகை இதனை நாங்கள் கக்கரிக்காய் என்று சொல்லுவோம். இதில் ஒருவகையான கக்கரிக்காயை மருந்துகள் தயாரிப்பதற்கும் பயன்படுத்துவார்கள்.
எங்கள் கிராமத்தில் வெள்ளரிக்காய், கக்கரிக்காய் இரண்டுமே பயிர்செய்தோம் அய்யா.
தாங்களது கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அய்யா.
மிக்க நன்றி தோழியே உமது பாராட்டுக்கும் ஊக்கத்திற்கும் . நான் கக்கரிக்காயைப் பற்றி மேலே குறிப்பிட்டுள்ளேன் தோழி.
அது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது . நிரூ இனிமேல் சாப்பிடுங்கள் ஓகே வாடா.........
அதனோடு நான் இந்த பகிர்வில் அனைவரும் ஒரேமாதிரி கருத்து தெரிவித்ததால் நான் கக்கரிக்காயின் படத்தையும் இணைத்துள்ளேன் பார்க்கவும். இதுபற்றிய உமது கருத்து என்ன தோழி.......
ஆசியா அக்கா உங்களது கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
நான் கக்கரிக்காய் பற்றி மேலே குறிப்பிட்டுள்ளேன் அக்கா பார்க்கவும்.
விஜி... இப்ப மேல நீங்க படம் வெளியிட்டப்புறம் இப்ப விஷயம் ரொம்பவே தெளிவாப் புரியுதும்மா. இதை நான் அவசியம் ட்ரை பண்றேன். சரியா...
மிக்க நன்றி நிரூ தோழி.
செய்முறைக் குறிப்புகள் அருமை.
காஞ்சனா அக்கா அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்.
அக்காவின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி . நம் நட்பு தொடரட்டும் அக்கா...
Post a Comment