Friday, April 6, 2012

பாகற்காய் சம்பல் - Bitter Gourd Sambol

பாகற்காய்  சம்பல் 

தேவையான  பொருட்கள் :
                     
                                 பாகற்காய்                      :    2 
                                 தக்காளி                           :    1 
                                வெங்காயம்                   :    1  
                                மிளகு தூள்                     :   அரை  டீஸ்பூன் 
                                உப்பு                                   :   தேவையான அளவு 
                                எண்ணெய்                      :   5 டேபிள் ஸ்பூன் 
                                மல்லி இலை                :   சிறிது 
                                எலுமிச்சை பழம்        :   அரை 
செய்முறை :
                 
                    முதலில்  பாகற்காயை  தண்ணீரில் கழுவி  வட்ட வட்டமாக நறுக்கிகொள்ளவும் . அதை  சிறிது  நேரம்  உலரவைக்கவும் . 
           பின்னர்    தக்காளியையும் , வெங்காயத்தையும்  சிறிது -சிறிதாக  (பொடிதாக) நறுக்கி வைத்துக்கொள்ளவும் . 



          கடாயில்  எண்ணெய்  விட்டு  காய்ந்ததும்  நறுக்கிய  பகாற்காயை  போட்டு பொரித்தெடுக்கவும் . அதை ஒருபாத்திரத்தில்  எடுத்து அதனுடன்  நறுக்கிய வெங்காயம் , தக்காளி  , உப்பு  தேவையான அளவு , மிளகு தூள்  அனைத்தையும்  போட்டு  நன்றாக  குலுக்கிவிடவும்  , பின்னர்   மல்லி இலையை   பொடிதாக  வெட்டி  அதன்  மேல்   தூவவும்  , எலுமிச்சை  சாறு  நான்கு  சொட்டு  விட்டு  சிறிது நேரம் கழித்து  எடுத்து  சாப்பிடலாம் .

                  தயிர்  சாதம், சாம்பார் சாதத்துடன்  சேர்த்து சாப்பிடுவதற்கு  பாகற்காய்  மிக  அருமையாக  இருக்கும் .  

குறிப்பு : பாகற்காய்  உடலுக்கு  ரொம்ப  நல்லது , இரத்தத்தை  சுத்தப்படுத்தும்  அதிலும்  சர்க்கரை  ( Diabetes )நோயாளிகளுக்கு  மிகவும் நல்லது . 
 
                                            
 
       

2 comments:

புவனேஸ்வரி ராமநாதன் said...

பாகற்காயில் புதியதொரு ரெசிபி
சொல்லித் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி
விஜி. வாழ்த்துக்கள்.

VijiParthiban said...

புவனா அக்கா வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி . நம் நட்பு மீண்டும் தொடரட்டும் .என்னுடைய வலைப்பூவின் உறவினராக வாருங்கள் அக்கா.