தேவையான பொருட்கள் :
பாகற்காய் : 2
தக்காளி : 1
வெங்காயம் : 1
மிளகு தூள் : அரை டீஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
எண்ணெய் : 5 டேபிள் ஸ்பூன்
மல்லி இலை : சிறிது
எலுமிச்சை பழம் : அரை
செய்முறை :
முதலில் பாகற்காயை தண்ணீரில் கழுவி வட்ட வட்டமாக நறுக்கிகொள்ளவும் . அதை சிறிது நேரம் உலரவைக்கவும் .
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய பகாற்காயை போட்டு பொரித்தெடுக்கவும் . அதை ஒருபாத்திரத்தில் எடுத்து அதனுடன் நறுக்கிய வெங்காயம் , தக்காளி , உப்பு தேவையான அளவு , மிளகு தூள் அனைத்தையும் போட்டு நன்றாக குலுக்கிவிடவும் , பின்னர் மல்லி இலையை பொடிதாக வெட்டி அதன் மேல் தூவவும் , எலுமிச்சை சாறு நான்கு சொட்டு விட்டு சிறிது நேரம் கழித்து எடுத்து சாப்பிடலாம் .
தயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவதற்கு பாகற்காய் மிக அருமையாக இருக்கும் .
குறிப்பு : பாகற்காய் உடலுக்கு ரொம்ப நல்லது , இரத்தத்தை சுத்தப்படுத்தும் அதிலும் சர்க்கரை ( Diabetes )நோயாளிகளுக்கு மிகவும் நல்லது .
2 comments:
பாகற்காயில் புதியதொரு ரெசிபி
சொல்லித் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி
விஜி. வாழ்த்துக்கள்.
புவனா அக்கா வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி . நம் நட்பு மீண்டும் தொடரட்டும் .என்னுடைய வலைப்பூவின் உறவினராக வாருங்கள் அக்கா.
Post a Comment