Monday, December 9, 2013

உல்லன் தொலைபேசி கவர் - Crochet Phone Cover

கொக்கிப்பின்னல்

 அனைவருக்கும் வணக்கம் ... வெகு நாட்களாக என்னால் வலைத்தளம் வரமுடியவில்லை.... அனைவரும் நலம்தான....


 
நான் தொலைபேசியின்  கவர் செய்துள்ளேன்....  இந்த வேலை முன்பே முடித்து விட்டேன்....   ஆனால் என்னால் பதிவிட முடிய வில்லை ....







Wednesday, September 25, 2013

அன்னாசி பழ அல்வா - PINEAPPLE HALWA




தேவையான பொருட்கள்:

அன்னாசி பழம் அரைத்தது - 1 கப்
சர்க்கரை    -  1/2 கப்
நெய்  -  3 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 6
பாதாம் பருப்பு - 4

செய்முறை:

நன்கு பழுத்த அன்னாசி பழத்தை தோல் நீக்கிவிட்டு நறுக்கி தேவையானதை எடுத்து மிக்சியில் அரைத்து வைத்து கொள்ளவும்.


மேற்சொன்ன பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைக்கவும்.
நான்ஸ்டிக்  பானில்  ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் நறுக்கிய முந்திரி, பாதாம் பருப்பையும்  லேசாக பொரித்து தனியாக  எடுத்துவைக்கவும். பின்னர் அதே பானில் இருக்கும் நெய்யுடன் இன்னும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து காய்ந்ததும்
அரைத்த பைனாப்பிள் விழுதை சேர்த்து கிளறவும்.


மிதமான சூட்டில் இருக்கவேண்டும் கைவிடாமல் கிளறவும் பின்
சீனியை சேர்த்து சிறிது ஹல்வா கலர் பவுடர் சேர்த்து கிளறி அதனுடன் ஒரு ஸ்பூன் நெய், பொரித்தெடுத்த பருப்பையும் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி இறக்கி ஒரு பிளேட்டில் கொஞ்சம் நெய்தடவி அல்வாவை அதில் வைத்து லேசாக நெய்தடவி  சிறிது மீதமுள்ள பருப்பை வைத்து தேவையான   வடிவில் நறுக்கி பரிமாறலாம். அன்னாசி பழ அல்வா ரெடி.





Wednesday, August 14, 2013

உல்லன் பர்ஸ் ( கொக்கிப்பின்னல் ) -CROCHET PURSE


வணக்கம் ....  வெகு நாட்களாக வலைத்தளத்திற்கு வரமுடியவில்லை ... என்னுடைய கணிப்பொறிக்கு சிறிது நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தொடர இயலவில்லை ... இப்பொழுதும் நான் எடுத்த ( கிளிக்கிய)
 படங்களையும் எடுக்கமுடியவில்லை.....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....


இப்பொழுது நான் பின்னிய உல்லன் பர்ஸ் இதோ உங்கள் பார்வைக்கு ... எப்படி இருக்கு என்று தங்களின் கருத்துக்கள் மூலமாக கூறுங்கள்... மேலும் உல்லன் தையல் தைக்க தெரிந்தவர்கள் எனக்கு கொஞ்சம் சொல்லித்தாருங்கள் ... ஏனென்றால் எனக்கு இதைப்பற்றி தெரியாது... ஆனால் இணையத்தின் மூலமாக நான் கற்றுக்கொண்டேன் .... அது எனக்கு ரொம்ப பிடிக்கும் .....



உல்லன் தையல் பர்ஸ்... இது நான் வேறு ஒன்றுக்கு செய்தேன் ஆனால் அது வரவில்லை ... உடனே அதை பர்ஸ்சாக மாற்றிவிட்டேன் . இது தாங்க இதனுடைய கதை....

Thursday, May 9, 2013

வெண்டைக்காய் மோர் குழம்பு - Lady fingers Butter Sauce


தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் -10
மோர்  - 1 கப்
மிளகாய் - 4 ( காரத்து கேற்ப )
தேங்காய் - 2 (3) டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மோர் மிளகாய் - 3
எண்ணெய் - தாளிக்க
கடுகு, உளுந்து  - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை , கொத்தமல்லி இலை  - சிறிது

செய்முறை:

முதலில் மிளகாய், தேங்காய், சீரகம் முதலியவைகளை அரைத்து மோருடன் சேர்த்து நன்றாக கரைத்து வைக்கவும் ( மோரை நன்றாக மத்தால் கடைந்து வைக்கவும் ).




கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து,கருவேப்பிலை , மோர் மிளகாய் சேர்த்து தாளித்து அதனுடன் வெண்டைக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும். வெண்டைகாய் நன்றாக வதங்கிய பின் மோர் கலவையை சேர்த்து சிறிது நேரத்திற்கு பின் கொதிவருவதர்க்கு முன் இறக்கி கொத்தமல்லி இலையை தூவி விடவும். கோடைக்கு  ஏற்ற வெண்டைக்காய் மோர் குழம்பு தயார்.


மோர் குழம்பு உடலுக்கு மிகவும்  நல்லது. உருளைக்கிழங்கு, வாழைக்காய்  வறுவல் , அப்பளத்துடன் ம்ம்ம்ம் சுவையாக இருக்கும் .





Monday, May 6, 2013

சப்பாத்தி உப்மா - Chapati Upma



தேவையான பொருட்கள்:

சப்பாத்தி - 4 
வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 2
கருவேப்பிலை  - 10 இலை
உப்பு - சிறிது
சில்லி வினிகர் - 1 டீஸ்பூன் 
எண்ணெய் - 2 டீஸ்பூன் 
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுந்து  - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்


செய்முறை:

முதல்நாள் சப்பாத்தி மீந்து விட்டால் கவலைவேண்டாம் ... அதனை சுவைமிகுந்த உப்மாவாக செய்து அசத்திவிடலாம்... மிக சுலபமான வேலை. 


கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு பொரிந்ததும் மிளகாய், கருவேப்பிலை , வெங்காயம் சேர்த்து வதக்கவும்.  லேசாக உப்பு சேர்த்து வதக்கலாம் ( சப்பாத்தியில் உப்பு இருக்கும் கவனமாக ).



நன்றாக வதங்கிய பின்னர் அரைத்து வைத்துள்ள சப்பாத்தியை சேர்த்து 2 நிமிடம் கிளறி  1/2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து  இறக்கி  பரிமாறவும் . வெங்காயம் கடலைப்பருப்புடன் சப்பாத்தி உப்மா சுவையாகவும், அருமையாகவும் இருக்கும்.



ஈசி கேப்பை தோசை

ஆசியா  அக்காவின் பதிவை பார்த்து செய்த ஈசி கேப்பை தோசை மிகவும் அருமையாக இருந்தது நன்றி அக்கா...




செய்முறை விளக்கம் இதோ இங்கு  ஈசி கேப்பை தோசை .

அம்ரிஷ்டரி ஃபிஷ் ஃப்ரை:



செய்முறை : இதோ கிளிக்

கிரிஸ்பி போன்லெஸ் சிக்கன் ஃப்ரை:


நான் கடலைமாவில்  தோய்த்து செய்தேன் நல்லா இருந்தது. எனது கணவர் மிகவும் விரும்பி சுவைத்தனர்... மிக்க நன்றி ஆசியா அக்கா...
நன்றி இதற்க்கு மட்டும் அல்ல என்னுடை வலைத்தளத்தில் முதன் முதலாக வருகைதந்து கருத்திட்டு என்னை உற்சாகபடுத்தியதற்கு  நன்றி அக்கா ...

திருமணத்திற்கு முன்பாக
சமையல் பக்கமே போகாத எனக்கு தங்களின் தளமும் கருத்தும் என்னை  மேன்மேலும் உற்சாக படுத்தியது ... இப்பொழுது சமையலில் ம்ம்ம்ம் மிகுந்த ஈடுபாடு வந்து விட்டது... இந்த நன்றியை ரொம்ப நாளாக சொல்லவேண்டும் என்று நினைத்தேன் இப்பொழுது தங்களின் பதிவுகளின் மூலம் தெரிவித்துள்ளேன்...

செய்முறை : இதோ இங்கு கிளிக் 

Friday, May 3, 2013

கொத்தமல்லி சட்னி , வெங்காயத் தோசை - Coriander Chutney , Onion Dosa

 


கொத்தமல்லி சட்னி:

அரைக்க தேவையான பொருட்கள்:

தேங்காய் - 3 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிது
பச்சை மிளகாய் - 2 ( காரத்திர்க்கேற்ப )
பூண்டு பல் - 1
சின்ன வெங்காயம் -  3 (4)
கருவேப்பிலை  - சிறிது
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
கருவேப்பிள்ளை

செய்முறை:

அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் தண்ணீர் சேர்த்து சட்னி பதத்திற்கு  அரைத்து ஒரு பௌலில் ஊற்றி வைத்துவிட்டு . பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கருவேப்பிலை  சேர்த்து தாளித்து சட்னியுடன் கலந்து விடவும். சுவையான கொத்தமல்லி சட்னி தயார் .

 

குறிப்பு:

புளி சிறிது சேர்த்து கொண்டாலும் நல்லா  இருக்கும்.

                                              - * -
   
வெங்காயத் தோசை

தோசை தவா காய்ந்ததும் தோசைமாவை ஒரு கரண்டி ஊற்றி
வட்டமாக சுற்றிவிட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை அதன் மேல் சேர்த்து  ( தேவையான அளவு ) சிறிது மிளகு பொடி  தூவி  எண்ணெய் ( நெய் ) தோசையின் மீது விட்டு  திருப்பி போட்டு
 வெந்ததும் எடுத்து சட்னி, சாம்பாருடன் பரிமாறலாம்.  சுவையான  வெங்காயத் தோசை ரெடி.


குறிப்பு:
வெங்காயத்தை லேசாக வதக்கிவிட்டு தோசையின் மீது தூவியும் வார்க்கலாம் . மிளகு பொடி சேர்க்காமலும் செய்யலாம் . அதன் சுவையும் நல்லா  இருக்கும்.

Thursday, May 2, 2013

பொடி தோசை - Dosai



தோசை தவா காய்ந்ததும் தோசைமாவை ஒரு கரண்டி ஊற்றி வட்டமாக சுற்றிவிட்டு ஒரு டீஸ்பூன் ( தேவையான அளவு ) இட்லி பொடியை அதன் மேல் தூவி  கொஞ்சம் எண்ணெய் ( நெய் )
தோசையின் மீது விட்டு  திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து சட்னி, சாம்பாருடன் பரிமாறலாம். அருமையான சுவையான காரசாரமான பொடி தோசை ரெடி.

 


புளிப்பொங்கல் நான் செய்தேன் நன்றாக இருந்தது மகி. எனக்கு இனிப்பு என்றால் ம்ம்ம்ம் ரொம்ப  பிடிக்கும் ... அதிலையும் இது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. புளிப்புடன் கூடிய இனிப்பு சேர்ந்து ரொம்ப நல்லா இருந்தது.மிக்க நன்றி மகி.

ஆனால் நான் புழுங்கல் அரிசி,  நல்லெண்ணெய் ஊற்றாமல் சாதா எண்ணெயில்தான் செய்தேன் அதுவும் நன்றாக இருந்தது புதுமையாக.
இதோ நான் செய்த புளிப்பொங்கல்.


  செய்முறை இதை கிளிக் செய்யுங்கள் : http://mahikitchen.blogspot.in/2013/04/blog-post_9.html

Wednesday, May 1, 2013

மே தின வாழ்த்துக்கள்


அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள் 





Tuesday, April 30, 2013

ரவா கேசரி - Rava Kesari





தேவையான பொருட்கள் :

ரவா - 1 டம்ளர்
தண்ணீர் - 4 டம்ளர்
சக்கரை   - 1 1/2 டம்ளர் (1)
திராட்சை - 12
முந்திரி பருப்பு - 8
நெய் - 5 டீஸ்பூன்
ஏலக்காய் - 3
கலர் பவுடர் - சிறிது
உப்பு - 1/4 டீஸ்பூன் 

செய்முறை:


ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்கவைக்கவும். கொதித்தபின் வருத்த ரவையை  சேர்க்கவும் கட்டிபடாமல் கிளறிவிடவும் . சிறிது உப்பு சேர்க்கவும் . தீ மிதமான பதத்தில் இருக்கட்டும்.


ரவை  நன்றாக சுருண்டு வெந்தவுடன் சர்க்கரையை  சேர்த்து கிளறவும் அதனுடன் ஏலக்காய் பொடி , சிறிது  கலர் பவுடர் ( சிறிது சுடு நீரில் கரைத்து சேர்க்கவும் ) நன்றாக கிளறி விடவும்.

 

கடாயில் நெய்விட்டு முந்திரி, திராட்சையை பொரித்து அதனுடன் சேர்த்து கிளறிவிட்டு இறக்கி வைக்கவும். இறக்கிவைத்து பரிமாறலாம் சுவையான இனிப்பான கேசரி ரெடி.

 

கேசரி ஆறியபின்னரே மிகவும் சுவையாகவும், எடுத்து சாப்பிட
அருமையாகவும்   இருக்கும். வாங்க எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக ரவா  கேசரி ரெடி .

குறிப்பு :

கலர் பொடியை  சிறிது சுடு நீரில் கரைத்து சேர்க்கவும் அல்லது தண்ணீர் கொதிக்கும் பொழுது சேர்க்கவும். தூவினால் திட்டு திட்டாக இருக்கும்.





Saturday, April 27, 2013

அன்னாசிப் பழ கேசரி - PINEAPPLE KESARI





தேவையான பொருட்கள் :

ரவா - 1 கப் ( வறுத்தது )
ஜீனி - 3/4 கப்
அன்னாசிப்  பழம் - 1 கப்  ( பொடியாகா   நறுக்கியது )
முந்திரி பருப்பு - 6
உலர் திராட்சை -7
தண்ணீர் - 3 கப்
நெய் - 3 டீஸ்பூன் 

செய்முறை:

 நான்ஸ்டிக் பானில் தண்ணீர் ஊற்றி அடிப்பில் வைத்து கொதிவந்தவுடன் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ரவாவை  லேசகா தூவிகொண்டே  கிளறிவிடவும்  ( கட்டிபடாமல் ). ஓரளவு ரவை வெந்து வந்தவுடன் ஜீனியை கொட்டி கிளறவும்.



பின் அதனுடன் நறுக்கிய அன்னாசிப் பழத்தை சேர்த்து கிளறிவிடவும். நன்றாக வெந்தவுடன்  ( சிறிதுநேரத்தில் ) இரண்டு  ஸ்பூன் நெய் விட்டு கிளறவும்.



பின் தனியாக ஒரு  டீஸ்பூன் நெய்விட்டு முந்திரி , திராட்சை பொரித்து அதனுடன் கலந்து விடவும். அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு சுவையான அன்னாசிப்  பழ கேசரி ரெடி.





 இனிப்புடன் அன்னாசி பழ சுவை சேர்ந்து மிகவும் அருமையான கேசரி தயார்.


குறிப்பு:

அன்னாசிப்பழ சுவைக்கு ஏற்றவாறு இனிப்பு சேர்த்துக்கொள்ளவும். கலர் தேவையெனில் சேர்த்துக்கொள்ளலாம். அன்னாசி பழத்தை அரைத்தும் செய்யலாம்.

Monday, April 22, 2013

ஈசி உருளைக்கிழங்கு வறுவல் - EASY POTATO FRY



தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு  - 100 கிராம்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் (அல்லது)  தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு  - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது 


செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை கழுவி தோல் நீக்கி ( அல்லது) தோலுடன் சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் கொஞ்சம் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை பொரிந்த பின்னர் நறுக்கிய உருளைக்கிழங்கு,  உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.



 பின்  மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்  மிதமான சூட்டில் இருப்பதே நல்லது. பின்பு கொஞ்சம் தேவைப்பட்டால் எண்ணெய் லேசாக  சேர்த்து வதக்கலாம். கிழங்கு வெந்தவுடன் (வதங்கியவுடன்) இறக்கி விடலாம். மிக மிக ஈசியான உருளைக்கிழங்கு வறுவல் ரெடி.


 சாம்பார் சாதம், தயிர் சாதம், பீட்ரூட் சாதம் என்று அனைத்திற்குமே காரசாரமாக இருக்கும்.


 

குறிப்பு: 

தண்ணீர் தேவையில்லை , மிதமான சூட்டில் இருக்க வேண்டும். மூடி போட்டு பிரட்டிவிடலாம்.

 

Thursday, April 18, 2013

CROCHET CAP - கொக்கிப்பின்னல்

 கொக்கிப்பின்னல் நான் எடுத்த இரண்டாவது முயற்ச்சி இது. கொஞ்சம் இணையத்தளத்தின் ( You Tube ) மூலமாக இரண்டு அடுக்குகள் கற்கொண்டு பின்பு நானாக செய்து முடித்துள்ளேன் .  அதனை என் உறவுகளாகிய உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

 


உல்லன் தையல் மூலம் நான் இதை செய்துவிட்டேன் என்ற சந்தோஷத்துடன் பகிர்கிறேன்...


 தொப்பியின் பின்புறம் 


தொப்பியின் முன்புறம்  

Sunday, April 14, 2013

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

                    அனைவருக்கும் என்னுடைய  இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வாங்க இனிப்பு சாப்பிடுங்க