Thursday, May 9, 2013

வெண்டைக்காய் மோர் குழம்பு - Lady fingers Butter Sauce


தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் -10
மோர்  - 1 கப்
மிளகாய் - 4 ( காரத்து கேற்ப )
தேங்காய் - 2 (3) டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மோர் மிளகாய் - 3
எண்ணெய் - தாளிக்க
கடுகு, உளுந்து  - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை , கொத்தமல்லி இலை  - சிறிது

செய்முறை:

முதலில் மிளகாய், தேங்காய், சீரகம் முதலியவைகளை அரைத்து மோருடன் சேர்த்து நன்றாக கரைத்து வைக்கவும் ( மோரை நன்றாக மத்தால் கடைந்து வைக்கவும் ).




கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து,கருவேப்பிலை , மோர் மிளகாய் சேர்த்து தாளித்து அதனுடன் வெண்டைக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும். வெண்டைகாய் நன்றாக வதங்கிய பின் மோர் கலவையை சேர்த்து சிறிது நேரத்திற்கு பின் கொதிவருவதர்க்கு முன் இறக்கி கொத்தமல்லி இலையை தூவி விடவும். கோடைக்கு  ஏற்ற வெண்டைக்காய் மோர் குழம்பு தயார்.


மோர் குழம்பு உடலுக்கு மிகவும்  நல்லது. உருளைக்கிழங்கு, வாழைக்காய்  வறுவல் , அப்பளத்துடன் ம்ம்ம்ம் சுவையாக இருக்கும் .





17 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் - இவ்வளவு கலர் வருமா...?

அடிக்கும் வெயிலுக்கு ஏற்ற மோர் குழம்பு...

நன்றி...

வை.கோபாலகிருஷ்ணன் said...

ருசிமிக்க மோர்க்குழம்புப்பகிர்வுக்கு மிக்க நன்றிகள், பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

Angel said...

பார்க்கவே மிக அருமையா இருக்கு விஜி ..எனக்குபிடித்த உணவு .

கோமதி அரசு said...

மோர் குழம்பு அருமை.

Sangeetha Nambi said...

Super dooper mor Kuzhambu...

இராஜராஜேஸ்வரி said...

சுவையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

Asiya Omar said...

பார்க்க சூப்பராக இருக்கு.எனக்கு ரொம்ப பிடிக்கும்.

மாதேவி said...

சுவையான மோர் குழம்பு.

Mahi said...

மோர்க்குழம்பில் மோர்மிளகாய் தாளிச்சு செய்ததில்லை. கலர்ஃபுல்லா இருக்கு மோர்க்குழம்பு!

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

முதன்முதலா இன்று வந்தேன்ன்.. நல்ல மோர்க்குழம்பு, பார்க்கவே ஆசையாக இருக்கு. சமைச்சுக் கலக்குறீங்க.

இளமதி said...

பார்க்கவே செய்துவிடத் தூண்டுகிறது. அருமை. செய்துபார்த்துவிட்டுச் சொல்கிறேன். நல்ல குறிப்பு. மிக்க நன்றி சகோதரி!

VijiParthiban said...

முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அதிர அக்கா, இளமதி அக்கா . வருக வருக என வரவேற்கிறேன்.

VijiParthiban said...

அனைவரின் கருத்திற்கும் வருகைக்கும் நன்றிகள் பலபல ...

Asiya Omar said...

வெண்டைக்காய் மோர்க்குழம்பு கலர்புல்லாக இருக்கு.அருமை.மோர் மிளகாய் சேர்ப்பது புதிது.

vimalanperali said...

மோர்க்குழம்பு வாசம் இங்கு அடிக்கிறதே/

அம்பாளடியாள் said...

வணக்கம் !
தங்களின் தளத்தை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன் முடிந்தால் தங்களின் வருகையினை உறுதிப் படுத்துங்கள் .தங்களை அறிமுகம் செய்ய எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பதனை நான் மிகவும் பெருமையாகக் கருதுகின்றேன் .மிக்க நன்றி படைப்பிற்கு !
http://blogintamil.blogspot.ch/2013/07/3.html

இராஜராஜேஸ்வரி said...

ஆயிரமாவது பதிவுக்கு
வாழ்த்துரைத்து சிறப்பித்தமைக்கு
மனம் நிறைந்த
இனிய அன்பு நன்றிகள்