Monday, May 6, 2013

சப்பாத்தி உப்மா - Chapati Upma



தேவையான பொருட்கள்:

சப்பாத்தி - 4 
வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 2
கருவேப்பிலை  - 10 இலை
உப்பு - சிறிது
சில்லி வினிகர் - 1 டீஸ்பூன் 
எண்ணெய் - 2 டீஸ்பூன் 
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுந்து  - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்


செய்முறை:

முதல்நாள் சப்பாத்தி மீந்து விட்டால் கவலைவேண்டாம் ... அதனை சுவைமிகுந்த உப்மாவாக செய்து அசத்திவிடலாம்... மிக சுலபமான வேலை. 


கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு பொரிந்ததும் மிளகாய், கருவேப்பிலை , வெங்காயம் சேர்த்து வதக்கவும்.  லேசாக உப்பு சேர்த்து வதக்கலாம் ( சப்பாத்தியில் உப்பு இருக்கும் கவனமாக ).



நன்றாக வதங்கிய பின்னர் அரைத்து வைத்துள்ள சப்பாத்தியை சேர்த்து 2 நிமிடம் கிளறி  1/2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து  இறக்கி  பரிமாறவும் . வெங்காயம் கடலைப்பருப்புடன் சப்பாத்தி உப்மா சுவையாகவும், அருமையாகவும் இருக்கும்.



ஈசி கேப்பை தோசை

ஆசியா  அக்காவின் பதிவை பார்த்து செய்த ஈசி கேப்பை தோசை மிகவும் அருமையாக இருந்தது நன்றி அக்கா...




செய்முறை விளக்கம் இதோ இங்கு  ஈசி கேப்பை தோசை .

அம்ரிஷ்டரி ஃபிஷ் ஃப்ரை:



செய்முறை : இதோ கிளிக்

கிரிஸ்பி போன்லெஸ் சிக்கன் ஃப்ரை:


நான் கடலைமாவில்  தோய்த்து செய்தேன் நல்லா இருந்தது. எனது கணவர் மிகவும் விரும்பி சுவைத்தனர்... மிக்க நன்றி ஆசியா அக்கா...
நன்றி இதற்க்கு மட்டும் அல்ல என்னுடை வலைத்தளத்தில் முதன் முதலாக வருகைதந்து கருத்திட்டு என்னை உற்சாகபடுத்தியதற்கு  நன்றி அக்கா ...

திருமணத்திற்கு முன்பாக
சமையல் பக்கமே போகாத எனக்கு தங்களின் தளமும் கருத்தும் என்னை  மேன்மேலும் உற்சாக படுத்தியது ... இப்பொழுது சமையலில் ம்ம்ம்ம் மிகுந்த ஈடுபாடு வந்து விட்டது... இந்த நன்றியை ரொம்ப நாளாக சொல்லவேண்டும் என்று நினைத்தேன் இப்பொழுது தங்களின் பதிவுகளின் மூலம் தெரிவித்துள்ளேன்...

செய்முறை : இதோ இங்கு கிளிக் 

8 comments:

Asiya Omar said...

அய்யோ ! அசந்தே போயிட்டேன்.அருமையான படங்களுடன் சமையல் சூப்பரோ சூப்பர்.பகிர்வுக்கு மிக்க நன்றி விஜி..

VijiParthiban said...

உடன் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆசியா அக்கா...

திண்டுக்கல் தனபாலன் said...

சப்பாத்தியை இப்படி எல்லாம் செய்ததேயில்லை... நன்றி சகோதரி...

படங்கள் யப்பா...!

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் ருசியான பதிவு. படங்களும் செய்முறையும் அழகு. பகிர்வுக்கு நன்றிகள்.

Angel said...

விஜி :)) ஆசியா மற்றும் ஜலீலா இவங்களாலதான் எங்க வீட்டில் நானும் வித விதமா சமைக்க ஆரம்பிச்சேன் .
கேப்பை கூழ் மற்றும் அனைத்தும் அருமை .
சப்பாத்தியில் காய்ந்த மிளகாய் கடலை பருப்பு காம்பினேஷன் நல்லா இருக்கும் போலிருக்கு ..எங்க வீட்டில் அடிக்கடி சப்பாத்திதான் ..

கோமதி அரசு said...

சப்பாத்தி உப்புமாவிற்கு கொஞ்சம் கரம் மசாலா சேர்ப்பேன் என் கணவருக்கு மசாலா சேர்த்தால் பிடிக்கும்.

மனோ சாமிநாதன் said...

சப்பாத்தி உப்புமா அருமை விஜி! படம் அழகாயிருக்கிறது! இதில் நம் கற்பனைக்கேற்ப, தக்காளி சேர்த்து வதக்கலாம். சிறிது இஞ்சி பூண்டு விழுது, பொடியாக அரிந்த ஸ்ப்ரிங் ஆனியன், குடமிளகாய், சில்லி பேஸ்ட் சிறிது இதெல்லாம் சேர்த்தால் மிகவும் ருசியாக இருக்கும்!!

VijiParthiban said...

அனைவரின் வருகைக்கும் மிக்க நன்றி. கோமதி அம்மா , மனோ அம்மா கூறியுள்ள படி நானும் செய்துபார்க்கிறேன்.... குறிப்பிற்கு நன்றி அம்மா ....