தோசை தவா காய்ந்ததும் தோசைமாவை ஒரு கரண்டி ஊற்றி வட்டமாக சுற்றிவிட்டு ஒரு டீஸ்பூன் ( தேவையான அளவு ) இட்லி பொடியை அதன் மேல் தூவி கொஞ்சம் எண்ணெய் ( நெய் )
தோசையின் மீது விட்டு திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து சட்னி, சாம்பாருடன் பரிமாறலாம். அருமையான சுவையான காரசாரமான பொடி தோசை ரெடி.
புளிப்பொங்கல் நான் செய்தேன் நன்றாக இருந்தது மகி. எனக்கு இனிப்பு என்றால் ம்ம்ம்ம் ரொம்ப பிடிக்கும் ... அதிலையும் இது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. புளிப்புடன் கூடிய இனிப்பு சேர்ந்து ரொம்ப நல்லா இருந்தது.மிக்க நன்றி மகி.
ஆனால் நான் புழுங்கல் அரிசி, நல்லெண்ணெய் ஊற்றாமல் சாதா எண்ணெயில்தான் செய்தேன் அதுவும் நன்றாக இருந்தது புதுமையாக.
இதோ நான் செய்த புளிப்பொங்கல்.
11 comments:
பொடி தோசை + புளிப்பொங்கல் இரண்டும் அருமை. பாராட்டுக்கள்.
விஜி பொடி தோசை !!! பார்க்கவே அருமையா இருக்கு ..நான் திருப்பி போட்டதே இப்படிஉங்க முறைலா செய்தாதான் அழகா மொரு மொறுன்னு இருக்கும் .
அந்த சட்னி ரெசிப்பி கிடைக்குமா
பொடி தோசை பார்க்கவே பசிக்குது விஜி! :) நான் பொடி தோசைய திருப்பிப் போடுவதில்லை..தவா-வை மூடி வைச்சு சுடுவதால் அப்படியே மடித்து எடுத்துருவேன்.
புளிப்பொங்கல் ரெசிப்பி செய்து பார்த்து படத்துடன் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி விஜி. உங்களுக்குப் பிடித்திருந்தது என்பதறிந்து மகிழ்ச்சி. இணைப்பு கொடுத்ததுக்கும் நன்றி!
//.நான் திருப்பி போட்டதே இப்படிஉங்க முறைலா செய்தாதான் அழகா மொரு மொறுன்னு இருக்கும் .//ஏஞ்சல் அக்கா, திருப்பிப் போடாமலும், "மொறு-மொறு பொடிதோசை" வருமே! :)
all time favorite... romba nalla iruku...
சுவையான (2) பதிவு... நன்றி சகோதரி...
அனைவரின் உடன் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி...
நானும் மூடிவைத்து செய்தால் திருப்பி போடா மாட்டேன் ... ஆனால் இதுமாதிரி தான் நான் பெரும்பாலும் செய்வேன்...நல்லா இருக்கும்...
அடுத்த பதிவில் தருகிறேன் சட்னி செய்முறை ஏஞ்சலின் அக்காவுக்காக.....
பொடி தோசை அருமை.
Super delicious....
அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி... நன்றி...நன்றி...
நம்ம ஊருல எல்லா தள்ளுவண்டியிலயும் இது ஃபேமஸ்..வீட்டுலயும் இப்போ பொடி தோசை சாப்பிடுவதுண்டு.
வருகை எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி கோவை நேரம் ...
Post a Comment