Wednesday, September 5, 2012

உருளைக்கிழங்கு பொடி மாஸ் - POTATO PODIMAS



தேவையான பொருட்கள்:

உருளைகிழங்கு  - 150 கிராம் 
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2

சோம்பு - 1/2 ஸ்பூன் 
கடுகு - 1/2 ஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1/4 ஸ்பூன் 
கருவேப்பிலை - சிறிது 
எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 


செய்முறை: 

உருளைக்கிழங்கை தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து எடுக்கவும்.  தோல் நீக்கி நன்றாக பிசைந்து வைக்கவும். 

வெங்காயம்,பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிகொள்ளவும். சோம்பு நன்றாக நுனிக்கிகொள்ளவும்.




 கடாயில் எண்ணெய் விட்டு சூடான பின் கடுகு, உளுத்தம் பருப்பு, தட்டி வைத்துள்ள சோம்பு போட்டு பொரிந்த பின் கருவேப்பிலை சேர்க்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி விடவும்.  பின்னர்  வேகவைத்து பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக பிரட்டி விடவும். 

அடுப்பை மிதமான சூட்டி வைத்து சிறிது நேரம் பிரட்டி விட்டு இறக்கிவிடவும். உருளைக்கிழங்கு  பொடி மாஸ் ரெடி



குறிப்பு: உருளைக்கிழங்கை தோல் நீக்கியும்  வேகவிடலாம், அப்படியே வெந்தபின்னும் தோழுரிக்கலாம் .


மருத்தவ பயன்கள்:

  • உருளைக்கிழங்கு இரத்த அழுத்தத்தை குறைக்கும்.  உடல் எடையையும் குறைக்கும். ( சமநிலையில் வைக்கும் )  .

  • நன்மைபயக்கும் பாக்டீரியாக்களை நம் உடலில் அதிகமாக்கும் தன்மை கொண்டது. அதனால் எளிதில் ஜீரணமாகும். உருழைக்கிழங்கு நமக்கு பல வகையில் நல்லது.

  • குறிப்பாக உருளைக்கிழங்கை எண்ணெயில்லாமல் ( குறைவான எண்ணெயில் )  உபயோகிப்பது நல்லது.

 


13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எளிதாக உள்ளது... உங்கள் செய்முறை படி ஒரு தடவை செய்து பார்ப்போம்... நன்றி...

Radha rani said...

விஜி..ரொம்ப நாளா காணலியே.... பிஸியா...எல்லா கிழங்கு பொடிமாஸ் இதே முறையில்தான் நானும் செய்வேன்.ஆனா சிறிது இஞ்சி சேர்ப்பேன்.படத்தில கிழங்கு சாப்பிட தோணுது.

virunthu unna vaanga said...

very yummy podimas... i usually had it with puliotharai...
VIRUNTHU UNNA VAANGA

Divya A said...

Delicious podimas love it with sambar :)

Today's Recipe ~ Apple Lemonade
You Too Can Cook Indian Food Recipes

Unknown said...

பொடிமாஸ் ரொம்ப நல்லா இருக்கு.. Ongoing event " Party snacks",more detais : http://en-iniyaillam.blogspot.co.uk/2012/08/party-snacks-event-announcement.html

வை.கோபாலகிருஷ்ணன் said...

எனக்கு மிகவும் பிடிததமான
“உருளைக்கிழங்கு பொடிமாஸ்”
பகிர்வுக்கு நன்றிகள்.

படங்களும் செய்முறையும் அருமையாக கொடுத்துள்ளீர்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தோழ் நீக்கி

என்று வரும் இடத்திலெல்லாம்

தோல் நீக்கி

என மாற்றிவிடவும்.

கரந்தை ஜெயக்குமார் said...

நல்ல பகிர்வு

Sangeetha Nambi said...

Love this ever Viji...
http://recipe-excavator.blogspot.com

ஹேமா said...

பிடித்த சாப்பாடு.அதுவும் சாம்பார் வைத்த அசைவநேரத்தில் மிகப் பிடிக்கும் !

VijiParthiban said...

கருத்து தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்....
திண்டுக்கல் தனபாலன் சகோ அவர்களுக்கு மிக்க நன்றி,
ராதா ராணி அக்கா அவர்களுக்கு மிக்க நன்றி... ஆமாம் அக்கா கொஞ்சம் பிஸி அதனால் தான் என்னால் வலைத்தளம் வந்து கருத்து தெரிவிக்கவும் முடியவில்லை. பதிவிடவும் முடியவில்லை...
விஜயலட்சுமி தர்மராஜ் மிக்க நன்றி தோழி,
திவ்யா பிரமிள் மிக்க நன்றி தோழி,
சிநேகிதி அவர்களே மிக்க நன்றி,
ஐயா வை.கோ. அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்,
கரந்தை ஜெயக்குமார் சகோ அவர்களுக்கு மிக்க நன்றி,
சங்கீதா நம்பி மிக்க நன்றி தோழி,
ஹேமா மனமார்ந்த நன்றிகள் தோழி.

Unknown said...

அருமை மிக்க நன்றி சகோ எங்க பக்கமும் வந்து எதாவது சொல்லிட்டு போங்க

Asiya Omar said...

உருளைக்கிழங்கு பொடிமாஸ் சூப்பர்.எனக்கு ரொமப ரொம்ப பிடிக்கும்.