Monday, July 9, 2012

நெல்லிக்காய் மோர்குழம்பு - (GOOSEBERRY) NELLIKKAI MORE KUZHAMBU




தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் - 4
பச்சை மிளகாய் - 5
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
தயிர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - 1/2 மூடி
கடுகு - 1 டீஸ்பூன்
மோர் மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி தழை - சிறிது 
எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு 

செய்முறை :

மிக எளிய முறை சத்துமிகுந்த நெல்லிக்காய் மோர் குழம்பு பற்றி பார்ப்போம் 


தேங்காயை துருவி கொண்டு , நெல்லிக்காயை விதை நீக்கி நறுக்கி எடுக்கவும் .




 
                   முதலில் தேங்காய், பச்சை மிளகாய், ஜீரகம், நறுக்கிய நெல்லிக்காய் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து எடுக்கவும்.




                  தயிரில் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கிவைக்கவும் . அதனுடன்  அரைத்த நெல்லிக்காய் தேங்காய் விழுதை சேர்த்து குழம்பு பக்குவத்திற்கு எடுத்துக்கொள்ளவும். 

                  கடாயில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்  கடுகு போடவும். பொரிந்ததும் மோர் மிளகாய் போட்டு , கறிவேப்பிலை சேர்த்து அதனுடன்   சிறிது பெருங்காய பொடி சேர்க்கவும். 

     பின் அதனுடன் ரெடியாக இருக்கும் நெல்லிக்காய் மோர் கரைசலை சேர்க்கவும். பின்பு அது நுரைத்து வரும்போதே இறக்கிவிடலாம் .
அதன்மேல் சிறிது கொத்தமல்லி தழையை போட்டு மூடிவிடவும்.
நெல்லிக்காய் மோர்குழம்பு ரெடி....


 

மோர்குழம்புடன்  உருளைக்கிளங்கு வறுவல், வாழைக்காய் வறுவல் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.....

குறிப்பு : 

மோர் குழம்பை கொதிக்கவிட வேண்டியது இல்லை .

மருத்துவ பயன்கள் : 


  • நெல்லிக்காயில் குளிர்ச்சி தன்மை உள்ளது . இது  உடல் வெப்பத்தை குறைக்கும் , முடி வளர்ச்சிக்கு உதவும்.                                                                                               
  •   உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் இதனை  ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும். இது தவிர வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.
  • அஜீரண கோளாறு, மயக்கம், வாந்தி போன்றவைகளுக்கு நெல்லிக்காய்  மற்றும் மோர் உகந்தது குளிர்ச்சியானது . 
  • வெயில் காலத்துக்கு, நெல்லிக்காய், மோர்  இரண்டும் ஒரு நல்ல மருந்துகள்   என்று சொல்லலாம்.
  • ரத்த சோகைக்கு நெல்லிக்காய் நல்ல மருந்து.   
  •  கால்சியம் சத்து நிறைய  நெல்லிக்காயில் இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும்.        


  • நெல்லிக்காய் பல நோய்களையும் கட்டுபடுத்தும் குறிப்பாக மஞ்சள்காமாலை, நீரிழிவு .




32 comments:

நிரஞ்சனா said...

நெல்லிக்காய்ன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும்னு உனக்குத தெரியும் தானே விஜி. நான் தேன்ல ஊற வெச்சுத் தரச் சொல்லிச் சாப்பிடுவேன். வெறுமயும் சாப்ட்டுட்டு தண்ணி குடிச்சு அந்த ஸ்விட்டை அனுபவிப்பேன். ஆனா... சமையல்ல இப்படி ஒரு ஐட்டத்துக்கு பயன்படுத்த முடியும்னு நினைச்சுக் கூட பாத்ததில்ல உண்மையில. சூப்பர்ம்மா. Sureஆ நான் இதை ட்ரை பண்ணிப் பாத்துடுவேன். Many Thanks VIJIMA!

VijiParthiban said...

உடன் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழி. ஆமாம் நிரூ உனக்கு நெல்லிக்காய் என்றால் பிடிக்கும் என்று எனக்கு தெரியும்டாடா.... செய்துபார்த்து சாப்பிட்டு சொல்லு நிரூ....

Radha rani said...

பெரு நெல்லிக்காய் இங்க நிறைய கிடைக்குது விஜி.அரை மூடி தேங்காய் போட்டால்தான் நல்லா இருக்குமா..சரி, நான் அதுல பாதி போட்டு ட்ரை பண்றேன்..மோர் குழம்பு படத்துல பாக்குறப்ப ம்ம்ம் :P

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகான படங்கள்.

அற்புதமான செய்முறை விளக்கம்.

நாக்கினில் நீர் ஊற வைக்கும் அற்புதமான [மோர்குழம்பு] படைப்பு.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். vgk ;)))))

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு சமையல் செய்முறை விளக்கம்... தொடர வாழ்த்துக்கள்... நன்றி ! (இன்னும் Email Subscription Widget - வைக்க வில்லையா ?)

VijiParthiban said...

வாழ்த்துக்கு மிக்க நன்றி ராதா ராணி அக்கா.. தேங்காய் அரைமூடிக்கு குறைவாகவும் வைக்கலாம் அக்கா... செய்து பாருங்கள்....

VijiParthiban said...

VGK ஐயா உங்களுடைய கருத்தும் வாழ்த்தும் என்னை உற்சாகப்படுத்துகிறது ... மிக்க நன்றி ஐயா....

VijiParthiban said...

திண்டுக்கல் சகோ அவர்களே உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி... வெகு விரைவில் Email subscription widget வைத்துவிடுகிறேன் சகோ ....

கோமதி அரசு said...

நெல்லிக்காய் மோர்குழம்பு செய்தது இல்லை செய்து பார்த்து விடுகிறேன்.

நெல்லிக்காயின் பயனுள்ள குறிப்புகள் அருமை.

VijiParthiban said...

உங்களது கருத்துக்கு மிக்க நன்றி கோமதியம்மா... செய்து பாருங்கள்....

இராஜராஜேஸ்வரி said...

நெல்லிக்காய் மோர்குழம்பு குறிப்பு அருமை.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

VijiParthiban said...

வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ராஜேஸ்வரி அக்கா .

VijiParthiban said...

Welcome vijayalakshmi Madam...

மாதேவி said...

நெல்லிக்காய் மோர்குழம்பு நன்றாக இருக்கின்றது.

VijiParthiban said...

வாங்க மாதேவி உங்களது கருத்திற்கு மிக்க நன்றி.... வளரட்டும் நம் நட்பு...

viji said...

It looks so nice. Want to taste it.
I think we call it nellikai pachadi......
viji

Mahi said...

ஊருக்கு போனபோது பயணங்களின் இடையில் நிறைய நெல்லிக்காய் மரங்களைப் பார்த்தேன், ஆனா நெல்லிக்காய்தான் சாப்பிடலை. இங்கும் கிடைக்காது, நெல்லிக்காய் ரெசிப்பிகளை படத்தில் பார்த்து ரசித்துக்கறேன்!

இந்த நெல்லிக்காய் சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடிப்பது மட்டுமே நான் செய்திருக்கேன். தண்ணி அவ்ளோ இனிப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா இருக்கும். :)

நல்லா இருக்கு மோர்குழம்பு!

VijiParthiban said...

ஓ அங்கு நெல்லிக்காய் கிடைக்காதா மகி. ஆமாம் நெல்லிக்காய் சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தால் ரொம்ப இனிப்பாக இருக்கும் ... நெல்லிக்காய் எனக்கு ரொம்ப பிடிக்கும் மகி.... கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி மகி...

ஸாதிகா said...

நெல்லிக்காயில் மோர்க்குழம்பு .புது விதமாக உள்ளதே.

Mrs.Mano Saminathan said...

வித்தியாசமான மோர்க்குழம்பு குறிப்பு தந்தமைக்கு பாராட்டுக்கள்! சத்தான, சுவையான மோர்க்குழம்பும்கூட!

VijiParthiban said...

ஆமாம் மனோ அம்மா நெல்லிக்காய் மோர்குழம்பு மிகவும் சத்தானது. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அம்மா... நம் நட்பு தொடரட்டும்...

VijiParthiban said...

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி ஸாதிகா அவர்களே...நம் நட்பு தொடரட்டும்...

Sangeetha Nambi said...

Adding turmeric will give color to this wonderful Mor Kuzhambu.. isn't it ??? :) Happy to follow u Viji....
http://recipe-excavator.blogspot.com

VijiParthiban said...

Welcome sangeetha Thank you for Yor visit and comments....

ஹேமா said...

நெல்லிக்காயில குழம்பா....புளிச்சுக்கொண்டு நல்லாயிருக்கும்ன்னு நினைக்கிறேன் !

VijiParthiban said...

தோழி ஹேமா அவர்களே தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்திற்கும் மிக்க நன்றி....

ராஜி said...

நெல்லிக்காய்ல மோர்குழம்பா? புதுசா இருக்கே?! செஞ்சு பார்த்துட வேஎண்டியதுதான்.

VijiParthiban said...

வாங்க ராஜி அக்கா... தங்களின் வருகைக்கு மிக்க நன்றி. ம்ம்ம்ம் செய்துபாருங்கள்...நம் நட்பு தொடரட்டும்....

Kanchana Radhakrishnan said...

நெல்லிக்காய் மோர்குழம்பு குறிப்பு அருமை.

VijiParthiban said...

கருத்திற்கு மிக்க நன்றி காஞ்சனா அக்கா..

Anonymous said...

thanks for the nice recipe !
good pictures !

VijiParthiban said...

Welcome.. Thank you for your sweet comments.