Saturday, July 28, 2012

குக்கர் சிக்கன் கிரேவி - COOKER CHICKEN GRAVY

தேவையான பொருட்கள் :


கோழிகறி  - 1/2 கிலோ
வெங்காயம் -3
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மிளகாய் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி பொடி - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2  ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பட்டை, கிராம்பு, மிளகு - சிறிதளவு
சோம்பு - 1டீஸ்பூன்
இஞ்சி , பூண்டு - நறுக்கியது சிறிது    
கலர் பொடி - சிறிது
பொட்டுகடலை மாவு - 1 டீஸ்பூன்  


செய்முறை:

முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்து வைக்கவும்.







வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை நடிவில் வகுந்து வைக்கவும். 





பின்னர் குக்கரில் சுத்தம் செய்த சிக்கன் ,  வெங்காயம்,  தக்காளி, பச்சைமிளகாய்,  மிளகாய் பொடி,  மல்லி பொடி,  மஞ்சள் பொடி, இஞ்சிபூண்டு விழுது, சிறிது கருவேப்பிலை,  உப்பு ,  1 ஸ்பூன்  எண்ணெய், மிளகு 10,  (பட்டை, கிராம்பு அரைத்து பொடியாகவும் சேர்க்கலாம்) பட்டை, கிராம்பு சிறிது  அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சிக்கனுடன் பிரட்டி 5 நிமிடம் ஊறவைக்கவும் .  

அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பிரட்டி விட்டு பின்னர் குக்கரை நன்றாக மூடி வைக்கவும். குக்கரில்  ஆவி வந்தவுடன் வெயிட்டை போடவும்.  பின்னர் மூன்று  விசில் வந்தவுடன் இறக்கிவிடலாம். இப்பொழுது கறியுடன் மசாலாக்கள் எல்லாம் சேர்ந்து  நன்றாக வெந்து இருக்கும் .


பின்னர் கடாயில் எண்ணெய்  ஊற்றி சூடான பிறகு சோம்பு, சிறிது மசாலா பொடி (பட்டை, கிராம்பு) , நறுக்கிய இஞ்சி பூண்டு ஆகியவைகளை சேர்த்து நன்றாக வதக்கவும். 





வதங்கிய பின் குக்கரில் இருக்கும் சிக்கனை அதில் சேர்க்கவும் , அதனுடன் சிறிது கலர் பொடியை சேர்த்து  நன்றாக பிரட்டி விடவும். வெந்த சிக்கனிலும் தண்ணீர் இருக்கும் .( தண்ணீர் நமக்கு தேவைபட்டால் சேர்த்துகொள்ளலாம் .) சிறிது நேரம் மூடி வைக்கவும். பிறகு  அதனுடன்  பொட்டுக்கடலை மாவை சேர்த்து பிரட்டிவிடவும் . பின்னர் தண்ணீர் சுண்டியவுடன் மல்லிதழையை தூவி அடுப்பை அணைக்கவும்...




இப்பொழுது குக்கர் சிக்கன் கிரேவி ரெடி. இதனை சாதம், சப்பாத்தி,
தோசை  ஆகியவைகளுடன் சேர்த்து சாப்பிடலாம்... மிகவும் அருமையான சுவைமிகுந்த சிக்கன் கிரேவி ரெடி.

குறிப்பு: கிரேவியாக வேடுமென்றால் இப்படி தண்ணீர் சேர்த்து செய்து கொள்ளலாம் . வறுவலாக வேண்டும் என்றால் தண்ணீர் சேர்க்காமல் வறுத்து கொள்ளலாம்.சுவையான குக்கர் சிக்கன் வறுவல் கிடைக்கும்.

மருத்துவ பயன்கள்:  

  •  தூதுவலை இலையைப் பறித்து நன்றாக கழுவி தண்ணீர் வற்றும் வரை உலரவிடுங்கள். பின்னர் அந்த இலையை  எண்ணெய்யில் (அல்லது) நெய்யில் நன்றாக பொரித்து தினமும் 10 இலை சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை, இருமல், ஜலதோஷம்  இருப்பவர்களுக்கு நல்லது.  விரைவில் குணமடையும்.  

பழமொழி:

ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு 


உயர உயரப்  பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.


பதினாறும் பெற்றுப்  பெருவாழ்வு வாழ்க.

21 comments:

Radha rani said...

இதே செய்முறையில் தான் நானும் செய்வேன் விஜி..ஆனால் மிளகு பொடி சிறிது சேர்ப்பதுண்டு.படத்தில நல்லா கலர்புல்லா சிக்கன் இருக்கு,mouth watering.

Radha rani said...

தூது வளை இலையை துவையலாகவும் செய்து சாப்பிடலாம் விஜி..நல்லா இருக்கும்.

VijiParthiban said...

அப்படியா அக்கா மிக்க மகிழ்ச்சி. அக்கா நானும் முழுமிளகு சேர்த்தேன் . ஆமாம் அக்கா தூதுவலை துவையலும் நல்ல இருக்கும் .... தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி அக்கா...

திண்டுக்கல் தனபாலன் said...

படத்துடன் செய்முறை அருமை.. வாழ்த்துக்கள் சகோதரி !

VijiParthiban said...

கருத்திற்கு மிக்க நன்றி திண்டுக்கல் சகோ அவர்களே .

Athisaya said...

அருமை..சாப்பிடனுமே இப்போ!!!!

VijiParthiban said...

கருத்திற்கு மிக்க நன்றி அதிசயா. சாப்பிட வாங்க....

Sangeetha Nambi said...

Very colorful dish... Love it...
http://recipe-excavator.blogspot.com

Jaleela Kamal said...

சிக்கன் கிரேவி, மருத்துவ குறிப்பு , பழமொழி எல்லாம் அருமை

VijiParthiban said...

Thank you sangeetha nambi...

VijiParthiban said...

கருத்திற்கு மிக்க நன்றி ஜலீலா அக்கா....

நிரஞ்சனா said...

நான் ரொம்ப லேட்டா வந்திருக்கேன் போல... அதனாலென்ன... பரவாயில்ல... ஏன்னா நான் சுத்த சைவமாச்சுதே. விஜி வைத்திருக்கற படங்களையும் செய்முறைக் குறிப்பையும் படிச்சு ரசிச்சேனே... அதுவே எனக்கு சந்தோஷமதானே...

VijiParthiban said...

லேட்டா வந்தாலும் என் அருமை தோழி வந்தமையும் அதனை ரசித்து பாரட்டியமையும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது நிரூ.... Thank You My Dear.....

R.Punitha said...

Hi Viji ,

I'm Punitha of

www.southindiafoodrecipes.blogspot.in

New to your interesting Space:)

Looks Nice and you give too many

details with your recipe.

Chicken Gravy looks Adorable!!!

Do collect your Sunshine Blogger Award at my space and Enjoy !!!

VijiParthiban said...

Thank you punitha sister .... thank you for your comments and Award....

ஸாதிகா said...

சுவை மிகு சிக்கன் கிரேவி.டிரைப்பண்ணிப்பார்க்கணும்.

VijiParthiban said...

மிக்க நன்றி தோழி ஸாதிகா.... செய்துபாருங்கள்....

ஹேமா said...

ஊரில தூதுவளையோடு கொஞ்சம் தேங்காய்ப்பூ சேர்த்து சம்பல் செய்வோம்.சிக்கன் கறி கிட்டத்தட்ட நானும் இதே முறையுல்தான் நல்ல காரமாகச் சமைப்பேன்.நன்றி விஜி !

VijiParthiban said...

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஹேமா...

அனைவருக்கும் அன்பு  said...

பழமொழிகளும்

புது சமையலும் அற்புதம் ........

அழகாக சமைப்பதி விட ருசியாக எழுதுவது எளிது போல தோழி .ம் தொடருங்கள்

VijiParthiban said...

சரளா அக்காவின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி...