Wednesday, May 23, 2012

வெண்டைக்காய் பால்கறி - VENDAIKKAI ( LADY'S FINGER ) PAAL CURRY


தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் -150 கிராம் 
தேங்காய்        -  1/2 மூடி 
வெங்காயம் - 1
தக்காளி    -   1
பச்சை மிளகாய் - 2
உப்பு -  தேவையான அளவு 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மல்லி தூள் -  2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள்  -  1/2 டீஸ்பூன் 
கடுகு - 1 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
எண்ணெய்   - 2 டேபிள்ஸ்பூன் 




செய்முறை:
    
                   வெண்டைக்காய் பால்கறி செய்வது பற்றி பார்ப்போம் .


                               


                        முதலில் வெண்டைக்காயை கழுவி வைக்கவும்.  ( தண்ணீருடன் நறுக்கினால் வழ  வழ  கொழ  கொழ வென வரும் ). 
ஆகையால்  காயிலுள்ள    தண்ணீர்  காய்ந்த பின் நறுக்கிகொள்ளவும். 
லேசாக ( 5 நிமிடம் ) வெண்டைக்காயை வதக்கி வைக்கவும். 




                       தேங்காயை துருவி அதை  முதலில் பிழிந்து கட்டியாக முதல்  
பால் எடுத்துக்கொள்ளவும் . பின்பு அந்த தேங்காய் துருவலை மிக்சியில் அரைத்து ( பிழிந்து )  இரண்டாம் பால் எடுத்துக்கொள்ளவும். மறுபடியும் 
அத்துருவலில்  தண்ணீர் தெளித்து பிழிந்து எடுக்கவும் மூன்றாம் பால் . 




                       
                      வெங்காயம் , தக்காளியை நறுக்கி,  பின் பச்சைமிளகாயை
நடுவில் கீரிகொண்டு  மேலே குறிப்பிட்ட  தேவையான  பொருட்கள் 
அனைத்தையும் தயாராக எடுத்துக்கொள்ளவும்.





                       கடாயில்  எண்ணெய் ஊற்றி கடுகு போடவும் பொரிந்ததும்  
பச்சை மிளகாய், வெங்காயம்  சேர்த்து வதக்கவும். பின் தக்காளி கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.


                      வதங்கியபின்பு வெண்டைக்காயை சேர்க்கவும் . அதனுடன் 
மிளகாய் தூள்,  மல்லி தூள்,   மஞ்சள் தூள், உப்பு சேர்த்து  பிரட்டிவிடவும் .
தேங்காய் பாலில் இரண்டாம் மற்றும்  மூன்றாம் பாலையும் அதனுடன்
ஊற்றி  உப்பு சரிபார்த்து மூடிவிடவும்.  நன்றாக கொதித்த பின்பு 
தனியாக வைத்திருக்கும்  தேங்காய் முதல் பாலை அதனுடன் சேர்த்து 
ஒரு கொதி வந்த பிறகு இறக்கிவிடவும்.
                                 சுவையான வெண்டைக்காய் பால்கறி ரெடி.



நான்   வெண்டைக்காய் பால்கறி  செய்து கருணைகிழங்கு வறுவல் 
செய்தேன்  சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருந்தது . அதனுடன் அப்பளமும் பொரித்து சாப்பிட்டோம் என்றால் 
மிக மிக சுவையாக இருக்கும் .





 குறிப்பு:  தேங்காய் பால் மூன்று விதமாக எடுக்க இயலாதவர்கள் 
முதலில் தேங்காயை பிழிந்து கட்டி பால் எடுக்கவும் . பின் அதனை 
அரைத்து நன்றாக வடித்து பால் எடுத்து வைக்கலாம் . 


மருத்துவ குறிப்புகள் :

  • தேங்காய் பால் வயிற்று புண்ணை  ஆற்றும் தண்மை கொண்டது.  
  • தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் ( Ulcer ) வயிற்றுப் புண்ணுக்கு  தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. இதில்  உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளதால்  இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது. 
  •  தேங்காயிலிருந்து எடுக்கப்படும்  எண்ணெய், தேங்காய் பால் போன்றவை அழகுப் பொருளாகவும், கூந்தலை பாதுகாக்கும் பொருளாகவும் விளங்குகிறது.
  •  உடல் வலிமைக்கு தேங்காய்ப் பால் நல்லது.
  •  நஞ்சு முறிவாகப் தேங்காய்ப் பால் பயன்படுத்தப்படுகிறது.




     

    16 comments:

    Usha Srikumar said...

    Yummy Vendaikkai paal curry...looks inviting!

    VijiParthiban said...

    உஷா அக்கா உடன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    வை.கோபாலகிருஷ்ணன் said...

    வெண்டைக்காய் பால் கறியா?
    கேள்விப்பட்டதே இல்லை.
    சாதாரண வெண்டைக்காய்க் கறியே நல்லா இருக்கும்.

    செய்முறை விளக்கங்கள் அருமை. ;)
    பகிர்வுக்கு நன்றிக்ள்.

    நிரஞ்சனா said...

    வெண்டைக் காயை புதுவிதமா செய்யறதுக்கு ஐடியா தந்திருக்கே விஜிம்மா. ஆனா ஒரு டவுட் எனக்கு... தேங்காய்ப் பாலை சேர்த்தா வெண்டைக்காயோட டேஸ்ட் போய், ஒரு மாதிரி அசட்டுத் தித்திப்பா ஆயிடாதோ? ப்ளீஸ், விளக்கும்மா!

    VijiParthiban said...

    VGK அய்யா அவர்களின் கருத்துக்கும் பாராட்டுகும் மிக்க நன்றி.
    அய்யா நீங்கள் சொல்லுவது போல் சாதாரண வெண்டைக்காய் கறியும் நல்லா இருக்கும். இந்த பால்கறியும் நல்லா இருக்கும்.
    இதை வயிற்று புண் இருப்பவர்கள் சாப்பிட்டால் நல்லது அய்யா.

    VijiParthiban said...

    நிரூ தேங்காய் பால் சேர்த்தால் ஒன்னும் ஆகாதுடா. அதோட தான் அதற்க்கான காரம், உப்பு சேர்ப்பதால் இந்த டேஸ்ட்டும் நல்லா இருக்கும்டா. இதை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
    நிரூவின் கருத்துக்கு மிக்க நன்றி.....
    நிரூ டவுட் தீர்ந்து விட்டதா என்று தெரியப்படுத்தவும்..

    நிரஞ்சனா said...

    ஸாரி விஜி! மனசுல தோணினதும் கேட்டுட்டேன். கோபமில்லையே... உங்க விரிவான விளக்கத்தைப் படி்ச்சதும் நல்லாவே புரிஞ்சிடுச்சு. யூஷுவல் வெண்டைக்காய் சாப்ட்டு போரடிச்சுப் போயிருந்ததுக்கு இதையும் ஒரு முறை ட்ரை பண்ணிப் பார்த்துடறேன். ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் கண்ணா! (நிரூவு்ம் குழந்தைத்தனம் முழுசாப் போகாத குமரிதான். அதனால விரும்பிச் சாப்பிடுவா ஃப்ரெண்ட்!)

    VijiParthiban said...

    நிரூ எனக்கு உன் மேல் கோபம் இல்லைடா . என் தோழி கேட்ட சந்தேகத்திற்கு நான் பதிலளித்தேன். நான் மிகவும் சந்தோஷமாக தான் சொன்னேன் குழந்தைநிரூ . ஸ்மைல் ப்ளீஸ் நிரூ.........

    கோமதி அரசு said...

    வெண்டைக்காய் பால்கறி, அருமை.
    படங்கள் வெண்டைக்காய் பாலகறி செய்யும் ஆசையை தூண்டுகிறது.

    VijiParthiban said...

    வாங்க கோமதி அரசு அவர்களே உங்களது வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    இராஜராஜேஸ்வரி said...

    உடல் நலத்திற்கு சிறந்த சுவையான பகிர்வு.. பாராட்டுக்கள்..

    VijiParthiban said...

    இராஜராஜேஸ்வரிஅக்கா கருத்துக்கும் , பாராட்டுக்கும் மிக்க நன்றி .

    Asiya Omar said...

    குறிப்பும் தேங்காய்ப்பால் குறித்த மருத்துவ குணமும் நல்ல பகிர்வு. அருமை.ப்டமும் தூள்.

    VijiParthiban said...

    மிக்க நன்றி ஆசியா அக்கா..............

    Radha rani said...

    வெண்டை காய் பால் கறி அருமை.. தேங்காய் பாலின் மருத்துவ தகவல்களும் அருமை.

    VijiParthiban said...

    ராதா ராணி அக்கா அவர்களை வருக! வருக!! என வரவேற்கிறேன் .

    தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அக்கா ....