வெண்டைக்காய் - 200
வெங்காயம் - 1
மிளக்காய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 1 டேபிள் டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் டீஸ்பூன்
செய்முறை:
முதலில் வெண்டைக்காயை கழுவி காயவைத்து நறுக்கிகொள்ளவும்.அதனை ஒரு கடாயில் போட்டு லேசான தீயில்
வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
பின்பு வெங்காயத்தை பொடியாக நறுக்கிய கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு போடவும்.
வெடித்ததும் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பின்
வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி மூடவும்.
தேங்காய் துருவலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.
வெண்டைக்காய் பொரியல் ரெடி.
குறிப்பு : வெண்டைக்காய் பொரியலை சாம்பார் சாதம் , ரசம் சாதத்துடன்
சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
வெண்டைக்காயின் மருத்துவ பயன்கள் :
- இது மிகவும் குளிர்ச்சியானது. உடல் எடைகுறையவும், உடலின் வெப்பத்தை குறைக்கவும் பயன்படுகிறது .
- விட்டமீன் ,கால்சியம் , நார்சத்து அதிகம் இருப்பதால் இதனை எல்லோரும் சாப்பிடலாம் .
- வெண்டைக்காய் அழகை கூட்டும் .
7 comments:
LADIES’ FINGER ஆல் செய்யப்படும் வெண்டைக்காய் பொரியல் ருசியாகத் தான் இருக்கும். சந்தேகமே இல்லை.
வெண்டைக்காய் அடிக்கடி நிறைய சாப்பிடுபவர்களுக்கு, மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும், கணிதப்பாடம் நன்றாக வரும் என்றும் சொல்லுவார்கள்.
பொரியல் படமும் செய்முறையும் ருசியோ ருசியாக இருந்தது.
பாராட்டுக்கள்.
யூஷுவலா எல்லார் வீட்லயும் வெண்டைக்காய் பொரியல் பண்றதுதானேன்னு நினைச்சுட்டு வந்தேன். தேங்காய்த் துருவல், வெங்காயம்னு பக்கவாத்தியம்லாம் சேர்த்து செய்யச் சொல்லியிருக்கியே விஜிம்மா...! அதான் ஸ்பெஷல் போலருக்கு. படத்தைப் பாத்தாலும் தெரியுது. அடுத்த முறை வெண்டைக்காய் பண்றப்ப, இந்த விஷயத்தை ட்ரை பண்ணிப் பாக்கச் சொல்றேன். ரொம்ப தாங்க்ஸ்ரா கண்ணா!
VGK அய்யா அவர்களை நான் வருக வருகவென வரவேற்கிறேன்.
உங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அய்யா.
நிரூ உன்னுடைய நகைசுவையான கருத்து எனக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியதுடா.
மிக்க நன்றி டா.....
பொரியல் சூப்பர்.படமே சொல்லுது.
மிக்க நன்றி ஆசியா அக்கா.
எங்க வீட்ல அப்பா அடிக்கடி செய்முறை கேப்பார்.சும்மா எதையாவது சொல்வன்.இப்ப தெளிவு.நன்றி சகோ
Post a Comment