Tuesday, May 29, 2012

கேரட் காளிபிளவர் தண்டு பொரியல் - CARROT CAULIFLOWER THANDU PORIYAL



தேவையான பொருட்கள்:

கேரட் - 100 கிராம் 
காளிபிளவர் தண்டு  - 100 கிராம் 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன் 
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் 
சீரகத்  தூள்  - 1/2 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
உப்பு - தேவையான அளவு 
கடுகு - 1 டீஸ்பூன் 
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன் 
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் 

செய்முறை:


              முதலில் கேரட் , காளிபிளவர் தண்டு   இரண்டையும்  நன்றாக கழுவி பொடியாக நறுக்கிகொள்ளவும்.  வெங்காயத்தையும்  நறுக்கி வைக்கவும்.



               மேலே குறிப்பிட்ட தேவையான  பொருட்கள் அனைத்தையும்
 எடுத்துக்கொள்ளவும்.


              வானலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உளுத்தம்பருப்பு போட்டு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து  பொன்னிறமாகும் 
வரை வதக்கி அதனுடன் நறுக்கிய காளிபிளவர்  தண்டு  ,கேரட் 
சேர்த்து வதக்கவும். 
   

            அத்துடன் மேற்கூறிய மசாலாப்பொருட்களான மஞ்சள் தூள் , மிளகாய் தூள், மல்லித் தூள் , ஜீரகத் தூள் , உப்பு சேர்த்து பிரட்டிவிடவும்  அதனுடன் காய் வேகும் அளவிற்கு தண்ணீர்  சேர்த்து உப்பு சரிபார்த்து 
குறைந்த தீயில் நன்றாக வேகவிடவும் . பிரட்டி விடவும், தண்ணீர் சுண்டி 
காய்வெந்தபிறகு இறக்கி  வைத்துவிடவும். 
                   இப்பொழுது கேரட் காளிபிளவர் தண்டு பொரியல் ரெடி.





குறிப்பு: காளிபிளவர் தண்டு வேக கொஞ்சம் நேரமாகும் அதனால் 
சிறிது தண்ணீர் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.





மருத்துவ பயன்கள்:


  • கேரட்டில் வைட்டமின் 'எ'  இருப்பதால் உடலுக்கும் , கண்களுக்கும்  ரொம்ப நல்லது.
  • கேரட் இரத்தத்தை சுத்தப்படுத்தும் அதனால் உடலுக்கு புத்துணர்ச்சி (எனர்ஜி), மேனி பளபளப்பு  கூடும் .
  • கேரட்டிற்கு கொழுப்பை கரைக்கும் திறன் உண்டு . வயிற்று புண் வராமலும் தடுக்கும். 
  • காளிபிளவரில் வைட்டமின் 'இ' சத்து இருப்பதால் சிறுநீர்பை,  சிறுநீரகம்   போன்றவற்றில்  எவ்வித பாதிப்பும்  இல்லாமல் பாதுகாக்கும். 
  • திசுக்கள், நகம் வளர்ச்சிக்கும் காளிபிளவரில்  உள்ள வைட்டமின் 'இ' பயன்படுகிறது.


24 comments:

Usha Srikumar said...

Romba nanraaga irukku,Viji

VijiParthiban said...

Thank you usha akka...

Radha rani said...

காரட் காலிபிளவர் தண்டு பொரியல் அருமை..ஒவ்வொரு காய்க்கும் ஒரு மருத்துவ குறிப்பு...தகவலுக்கு பாரட்டுக்கள்.

Asiya Omar said...

மருத்துவப்பயன்களோடு குறிப்பு தருவது பாரட்டத்தக்கது.சூப்பர் சத்தான பொரியல்.

Unknown said...

கேரட் எனக்கு ரொம்பப் பிடிக்கும் விஜி. இந்த காலிஃப்ளவர்...! ஒரு மு‌றை நான் ட்ரை பண்ணி சொதப்பிட்டேன். அதுலருந்து ஒரே பயம். நறுக்க பயம், கொதிக்க வைக்க பயம், சாப்பிட பயம். எல்லாம் பயமெனக்கு. (ச்சே..! நேத்து தெனாலி பாத்த பாதிப்புல உளர்றேன்)

இப்ப நீ சொல்லியிருக்கற முறைப்படி மறுபடி நாஆஆஆஆனே ட்ரை பண்றேன் காலிஃப்ளவர் சமைக்க! நல்ல குறிப்புத் தந்த என் தோழிக்கு மிக்க நன்றி!

VijiParthiban said...

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ராதா ராணி அக்கா

VijiParthiban said...

ஆசியா அக்கா பாராட்டுகளுக்கு மிக்க நன்றி .....

VijiParthiban said...

நிரூவுக்கு பயமா எனக்கு சிரிப்புதான் வருதுடா . நிரூ தைரியமான பொண்ணு ஓகே வாடா சின்னபுள்ள .
நீ சமைத்து பாரு நன்றாக வரும் .... " சமையல் சமையல் நிரூ சமையல்............... "

வாழ்த்துக்களுக்கு நன்றி நிரூ.....

வை.கோபாலகிருஷ்ணன் said...

ருசியான பதிவு அதுவும் மருத்துவ குணங்களுடன் ,,, ;) பாராட்டுக்கள்.

VijiParthiban said...

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி VGK அய்யா ...

இராஜராஜேஸ்வரி said...

கேரட்டிற்கு கொழுப்பை கரைக்கும் திறன் உண்டு . வயிற்று புண் வராமலும் தடுக்கும்.

மருத்துவ குணங்களுடன்ருசியான பதிவு

பாராட்டுக்கள்.

VijiParthiban said...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ராஜராஜேஸ்வரி அக்கா......

ஹேமா said...

சத்துள்ள சமையல் தோழி.குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும் !

VijiParthiban said...

வாங்க தோழி ஹேமா. தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
ஆமாம் தோழி கேரட் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் . விரும்பி சாப்பிடுவார்கள்....

Unknown said...

விஜி... இன்னிக்கு இந்தப் பதிவு படிச்சேன். எனக்கு சரியாப் புரியலை. ஆனா உனக்கு பயன்படும்னு தோணுது. புரியுதான்னு பார்த்து தேவைப்பட்டா பயன்படுத்திக்கம்மா...

http://www.bloggernanban.com/2012/05/recipe-snippets.html

VijiParthiban said...

நான் படித்து பார்த்து பயன்படுத்துகிறேன் நிரூ..
என்மேல் அக்கறை கொண்டுள்ள உனக்கு என்னுடைய மனமார்ந்த Thanksdaa ....

Unknown said...

விஜி... டெக்னிக்கலாக எனக்கும அதிகம் தெரியாது. கேட்டுத் தெரிந்து கொண்டு இன்றிரவு உன் பிரச்னையைத் தீர்க்க முடியுமா என்று பார்க்கிறேன்மா.

VijiParthiban said...

ok நிரூ Thank you da.

Unknown said...

விஜி... செட்டிங் ஏதாவது மாறியிருந்தா இப்படி ஆகுமாம். என் ப்ரெண்ட் ஒருத்தர் சொன்னது இது:

Dashboard-ல Settings-ஐ க்ளிக் பண்ணி, அதுல வர்ற மெனுல Language and formattingன்னு இருக்கறதை செலக்ட் பண்ணு. அப்றம் மேல Language - English ன்னும், அதுக்குக் கீழ இருக்கற மெனுவுல Enable transliterationங்கறதுக்கு நேரா English செலக்ட் பண்ணணும். அதுக்கடுத்து in ங்கற வார்த்தைக்கு அப்றம் தமிழ் -ன்னு லாங்வேஜை செலக்ட் பண்ணணும். ஸேவ் பண்ணிட்டு எக்ஸிட் பண்ணிட்டு மறுபடி டாஷ்போர்டுக்கு வந்து நியூ போஸ்ட்ல போய் போஸ்ட் பண்ணினா சரியாய்டும்.

-சரியா வருதான்னு பார்த்துட்டுச் சொல்லும்மா ஃப்ரெண்ட்!

VijiParthiban said...

நிரூ நீ கூறிய படியெல்ல (settings) நானே முதலில் செய்துபார்த்தேன் ஆனால் வரவில்லைடா ... எனக்காக கேட்டு சொல்லியதற்கு மிக்க நன்றி தோழி....

கோமதி அரசு said...

அருமையான சத்தான நல்ல மருத்துவ குறிப்புகளுடன்.

வாழ்த்துக்கள்.

Kanchana Radhakrishnan said...

சத்தான பொரியல் .சூப்பர்..

R.Punitha said...

Hi Viji ,

I'm Punitha of www.southindianfoodrecipes.blogspot.in

New to your space Viji. Your recipe looks Awesome and neat demonstration.
at your free time do visit my blog and give your valuable comments Viji:)

VijiParthiban said...

கோமதி அக்கா வாழ்த்துக்கு மிக்க நன்றி.
மிக்க நன்றி காஞ்சனா அக்கா.
welcome punitha . Thank you for your comments.