தேவையான பொருட்கள் :
மாங்காய் - 1
வெல்லம் - 1/2 அச்சு ( ஜீனி )
மிளகாய் தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 1 இனுக்கு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உ .பருப்பு போட்டு அது வெடித்த பிறகு கறிவேப்பிலையை போடவும் . பின்பு செதுக்கிய மாங்காவை சேர்த்து அதனுடன் வெல்லம், மிளகாய் தூள்,உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடிவிடவும். சிறிது நேரத்திற்கு பிறகு மூடியை எடுத்துவிட்டு லேசாக பிரட்டிவிட்டு மூடவும். அது கொஞ்சம் கெட்டியானபின் அடுப்பை அணைக்கவும்.
பொதுவாக மாங்காய் மிகவும் வேகமாக வெந்துவிடும் அதனால் உங்களுக்கு ஏற்றபடி வேகவைத்துக்கொள்ளலாம். அதேபோன்று இனிப்பும் தேவையான அளவு போடலாம்.
இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது.இனிப்பு மாங்காய் பச்சடி ரெடி.
2 comments:
சூப்பர்.வேர்ட் வெரிபிகேஷன் எடுத்துங்களேன்,கமெண்ட் போடுறவங்க இதனால் போடாம போகும் வாய்ப்பு உண்டு.
தாங்களது வருகைக்கும் கருத்துக்கு மிக்க நன்றி ஆசியா அக்கா.
Post a Comment