Monday, April 23, 2012

இறால் வாழைக்காய் வறுவல் - PRAWNS PLANTAIN FRY



இறால் வாழைக்காய் வறுவல் - PRAWNS PLANTAIN FRY  

தேவையான பொருட்கள் :

இறால் - 1/2 கிலோ 
வாழைக்காய் - 1 
வெங்காயம் - 1 
தக்காளி - 1 
சோம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்  
மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன் 
கொத்தமல்லித்தழை - சிறிதளவு 
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
பட்டசோம்பு - சிறிதளவு 
எலுமிச்சை - சிறிதளவு 

செய்முறை:



         முதலில் இறாலை தோல்நீக்கி கழுவி சுத்தம் செய்து கொள்ளவேண்டும். அதனுடன் மிளகாய் தூள், சோம்பு தூள், சீராகத் தூள், 
மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சைசாறு சிறிது சேர்த்து நன்றாக 
பிசைந்து குறைந்தது அரை மணி நேரமாவது வைக்கவேண்டும். 

         அந்த நேரத்தில் நீங்கள் வெங்காயம், தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கிகொள்ளவும். வாழைக்காயை  ( நீங்கள் விரும்பிய வடிவத்தில் வட்டமாக, சதுர துண்டுகளாக ) நறுக்கிகொள்ளவும்


         இஞ்சி பூண்டு விழுது தயார் செய்துகொள்ளுங்கள், கொத்தமல்லிதழை பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.



         கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானபின் பட்டசோம்பையை போடவும்  ( சோம்பு கொஞ்சம் கூடவே போடலாம் ), பின் நறுக்கிய வெங்காயத்தை போடவும், சிறிதுநேரம் வதங்கியபின் கறிவேப்பிலை,  இஞ்சி பூண்டு விழுதை போட்டபின்பு தக்காளியை சேர்த்து வதக்கவும்.

       நன்று  வதங்கியபின் நறுக்கிய வாழைக்காயை சேர்த்து நன்றாக பிரட்டி சிறிது நேரம் மூடி வைக்கவும். வாழைக்காய் சற்று வெந்த பின்பு இறாலை போட்டு பிரட்டிவிடவும் அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து, உப்பு சரிபார்த்து மூடிவிடவும். சற்று நேரத்திற்கு பின் மறுபடியும் பிரட்டிவிடவும் ( தண்ணீர் சுண்டும் வரை ). தேவைபட்டால் எண்ணெய் சிறிதளவு சேர்த்து பிரட்டிவிடவும். பின்பு மல்லிதழையை தூவி
இறக்கிவிடவும்.  இறால் வாழைக்காய் வறுவல் ரெடி.  
  
                
    குறிப்பு :  இறால் வாழைக்காய் கிரேவி வேண்டுமென்று நினைத்தால் இதனுடன் கொஞ்சம் தேங்காய் சோம்பு  அரைத்து சேர்த்து, சிறிது  தண்ணீர் ஊற்றி வேகவிட்டு இறக்கவும். இறால் வாழைக்காய் கிரேவி  ரெடி.

2 comments:

Asiya Omar said...

அருமை விஜி.வாழைக்காய் சேர்த்து இறால் இதுவரை செய்தததில்லை.

VijiParthiban said...

நன்றி அக்கா .