நெய்யப்பம்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1/2 கிலோ
கருப்பட்டி - 300 கிராம்
பூவன் வாழைப்பழம் - 1
சுக்கு , ஏலக்காய் - தேவையான அளவு
நெய் - 50 கிராம்
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
அரிசியை ஊறவைத்து புட்டுமாவு பதத்தில் மொறு
மொறுப்பாக அரைக்கவும் . ஏலம் , சுக்கைப் பொடித்துக்
கொள்ளவும் . கருப்பட்டியில் 1 குவளை தண்ணீர் ஊற்றி
பாகு காய்ச்சி , அதில் பொடித்த ஏலம் , சுக்கு , அரைத்த மாவு ,
வாழைப்பழம் , நெய் அனைத்தையும் சேர்த்து பிசைந்து
கரண்டியில் எடுத்து ஊற்றும் பதத்துக்கு கரைத்து , மூன்று
மணி நேரம் புளிக்க வைக்கவும் . பின்னர் ஒரு ஒரு கரண்டியாக
ஊற்றி தேங்காய் எண்ணெயில் பொரித்தேடுக்கவும் .
" நெய்யப்பம் தயார் "
3 comments:
nice taste !!!
வணக்கம்...
உங்களின் இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...
http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_23.html
வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.பகிர்வுக்கு நன்றி.
Post a Comment