Wednesday, September 25, 2013

அன்னாசி பழ அல்வா - PINEAPPLE HALWA




தேவையான பொருட்கள்:

அன்னாசி பழம் அரைத்தது - 1 கப்
சர்க்கரை    -  1/2 கப்
நெய்  -  3 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 6
பாதாம் பருப்பு - 4

செய்முறை:

நன்கு பழுத்த அன்னாசி பழத்தை தோல் நீக்கிவிட்டு நறுக்கி தேவையானதை எடுத்து மிக்சியில் அரைத்து வைத்து கொள்ளவும்.


மேற்சொன்ன பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைக்கவும்.
நான்ஸ்டிக்  பானில்  ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் நறுக்கிய முந்திரி, பாதாம் பருப்பையும்  லேசாக பொரித்து தனியாக  எடுத்துவைக்கவும். பின்னர் அதே பானில் இருக்கும் நெய்யுடன் இன்னும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து காய்ந்ததும்
அரைத்த பைனாப்பிள் விழுதை சேர்த்து கிளறவும்.


மிதமான சூட்டில் இருக்கவேண்டும் கைவிடாமல் கிளறவும் பின்
சீனியை சேர்த்து சிறிது ஹல்வா கலர் பவுடர் சேர்த்து கிளறி அதனுடன் ஒரு ஸ்பூன் நெய், பொரித்தெடுத்த பருப்பையும் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி இறக்கி ஒரு பிளேட்டில் கொஞ்சம் நெய்தடவி அல்வாவை அதில் வைத்து லேசாக நெய்தடவி  சிறிது மீதமுள்ள பருப்பை வைத்து தேவையான   வடிவில் நறுக்கி பரிமாறலாம். அன்னாசி பழ அல்வா ரெடி.





15 comments:

கோமதி அரசு said...

அன்னாசி பழ அல்வா மிகவும் நன்றாக இருக்கிறது.

Radha rani said...

நாவூரச் செய்யும் அருமையான அல்வா. நல்லாயிருக்கு விஜி..ஈசியான குறிப்பா இருக்கு.. செய்து பார்க்க வேண்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

அட... ! சூப்பர்... செய்து பார்ப்போம்... செய்முறைக்கு நன்றி...

இமா க்றிஸ் said...

ஆசையா இருக்கு. யாராச்சும் விருந்துக்கு வந்தா செய்யலாம். இல்லாட்டா நானே சாப்பிட்டு தீர்த்துருவேன். ;))

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அழகான ருசியான பதிவு. பராட்டுக்கள்.

எல்லோருக்கும் இன்று அல்வா கொடுத்து விட்டீர்கள். ;)

வாழ்த்துகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

சாப்பிடத்தூண்டுகிறது

கரந்தை ஜெயக்குமார் said...

சாப்பிடத்தூண்டுகிறது

முற்றும் அறிந்த அதிரா said...

சூப்பராக வந்திருக்கு அல்வா.

VijiParthiban said...

வருகை தந்து கருத்துதெரிவித்த என் நட்பு உள்ளங்களுக்கு மிக்க நன்றி.... நன்றி.. நன்றி...

Mahi said...

வித்யாசமான அல்வா விஜி! பூசணி அல்வா போல அன்னாசி அல்வா? கலரே அட்ராக்டிவா இருக்கு.

மாதேவி said...

சுவையான அல்வா.

இராஜராஜேஸ்வரி said...

ருசியான வித்தியாசமான அல்வா..!

Asiya Omar said...

சூப்பர் அல்வா. நலமா? விஜி,நீண்ட நாட்கள் பகிர்வைக் காணோம்.

சாரதா சமையல் said...

அன்னாசிபழ அல்வா சூப்பராக இருக்கு.என்னுடைய வலைப்பூ வருகைக்கு மிக்க நன்றி.

ashok said...

looks yummy!