Friday, May 3, 2013

கொத்தமல்லி சட்னி , வெங்காயத் தோசை - Coriander Chutney , Onion Dosa

 


கொத்தமல்லி சட்னி:

அரைக்க தேவையான பொருட்கள்:

தேங்காய் - 3 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிது
பச்சை மிளகாய் - 2 ( காரத்திர்க்கேற்ப )
பூண்டு பல் - 1
சின்ன வெங்காயம் -  3 (4)
கருவேப்பிலை  - சிறிது
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
கருவேப்பிள்ளை

செய்முறை:

அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் தண்ணீர் சேர்த்து சட்னி பதத்திற்கு  அரைத்து ஒரு பௌலில் ஊற்றி வைத்துவிட்டு . பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கருவேப்பிலை  சேர்த்து தாளித்து சட்னியுடன் கலந்து விடவும். சுவையான கொத்தமல்லி சட்னி தயார் .

 

குறிப்பு:

புளி சிறிது சேர்த்து கொண்டாலும் நல்லா  இருக்கும்.

                                              - * -
   
வெங்காயத் தோசை

தோசை தவா காய்ந்ததும் தோசைமாவை ஒரு கரண்டி ஊற்றி
வட்டமாக சுற்றிவிட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை அதன் மேல் சேர்த்து  ( தேவையான அளவு ) சிறிது மிளகு பொடி  தூவி  எண்ணெய் ( நெய் ) தோசையின் மீது விட்டு  திருப்பி போட்டு
 வெந்ததும் எடுத்து சட்னி, சாம்பாருடன் பரிமாறலாம்.  சுவையான  வெங்காயத் தோசை ரெடி.


குறிப்பு:
வெங்காயத்தை லேசாக வதக்கிவிட்டு தோசையின் மீது தூவியும் வார்க்கலாம் . மிளகு பொடி சேர்க்காமலும் செய்யலாம் . அதன் சுவையும் நல்லா  இருக்கும்.

8 comments:

கோமதி அரசு said...

கொத்தமல்லி சட்னி, வெங்காயத்தோசை கண்ணைக்கவருது.
ருசியும் மிக நன்றாக இருக்கும், மிளகு பொடி போடாமல் இட்லி மிளகாய் பொடி போட்டு குழந்தைகளுக்கு செய்து கொடுப்பேன், மிளகு போடி போட்டு செய்துப்பார்க்கிறேன்.
நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

கொத்தமல்லி சட்னி, வெங்காயத்தோசை படத்தில் பார்க்கவே பசியைக் கிளப்புவதாக உள்ளது.

ருசியும் மிக நன்றாக இருக்கும்.

அழகான ருசிமிக்கப்பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

Angel said...

இரண்டுமே அருமை.வெங்காய தோசை பார்க்கவே பசியை தூண்டுது ...

VijiParthiban said...

அனைவரின் வருகை எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி உறவுகளே....
கோமதி அம்மா நானும் இட்லி போடி போட்டும் செய்வேன் நல்லா இருக்கும்.... நன்றி ...

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா... இரண்டுமே சூப்பரா இருக்கு... நன்றி...

Mahi said...

ப்ரேக்ஃபாஸ்ட் டைமில இங்க வந்தா பசியக் கிளப்புறீங்களே!! அவ்வ்வ்வ்வ்!

விஜி, மறுபடியும் கறிவேப்பிலை/கருவேப்பிலை கருவேப்பிள்ளை ஆகிட்டாரோ?! ;)

Kanchana Radhakrishnan said...

super..super.

Asiya Omar said...

பார்க்கவே சுவையாகத் தெரிகிறது.ம்ம்ம்.அசத்துங்க..