Thursday, October 11, 2012

விநாயகர் சதுர்த்தி

மும்பையின் முக்கியமான திருவிழா விநாயகர் சதுர்த்தி

  விநாயகர் சதுர்த்தி மும்பையில் மிகவும் சிறப்பாகவும் செம்மையாகவும் கொண்டாடப்படும்.  பார்ப்பதற்கு  மிகவும்   மகிழ்ச்சியாகவும் வண்ணமயமாகவும் இருக்கும். ஆமாம் தெருக்களில் இருபுறங்களிலும் வண்ணவண்ண மின்விளக்குகளால்  அலங்கரிக்கப்பட்டு இருக்கும். 




       வீடுகளிலும், தெருக்களிலும் கணபதியின் சிலைகள் வைக்கப்பட்டு இருக்கும். அதற்க்கு விநாயகர்  சதுர்த்தி  அன்று  (மோதகம் ) கொழுக்கட்டை செய்து , பழங்கள் எல்லாம் வைத்து பூஜை செய்வார்கள். அன்றிலிருந்து   பூஜைகள்   ஒவ்வொரு  நாளும்   கொண்டாடப்படும்  
( பதினொன்று நாட்கள் நடக்கும் ).



      பின்னர் அவரவர்  வழக்கப்படி ஒன்றரை நாள், மூன்றாம் நாள், ஐந்தாம் நாள், ... பதினொன்றாம் நாள்  என்று விநாயகர் சிலைகளை  எடுத்துகொண்டு போகும் பொழுது பாட்டு பாடி,  தெருக்களில் குத்தாட்டம் போட்டுக்கொண்டு சென்று கடலில் , அல்லது செயற்கை குளங்களில் கரைப்பார்கள். அப்பொழுது சிறுவர்கள் முதல், பெரியவர்கள் வரை ஆட்டம் போட்டு கொண்டும் " கணபதி பாப்பா - மோரியா , மங்கள்மூர்த்தி - மோரியா " என்று கூறிக்கொண்டும் சென்று வருவார்கள்.




     நமக்கு பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும். தினமும் மக்கள் அனைவரும் ஒவ்வொரு கணபதியையும் சென்று தரிசித்து வருவார்கள். மிக நன்றாக  இருக்கும் .



 ஆமாம்  மும்பையில் பதினோரு நாட்கள் திருவிழாக் கோலமாக மிகவும் சிறப்பாகவும் அனைவராலும் வரவேற்க்ககூடிய திருவிழா விநாயகர் சதுர்த்திதான். இதனை சியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வரவேற்று காற்று இருக்கும் விழா... 











  இந்தமுறையும் வெகு சிறப்பாக நடைப்பெற்றது...... அடுத்தது வரவேற்க கூடிய விழா நவராத்திரி இதுவும் சிறப்பாக கொண்டாடுவார்கள்.....

11 comments:

Radha rani said...

விநாயகர் ரொம்ப மனதுக்கு பிடித்த தெய்வம். ஒவ்வொரு படமும் வித விதமா அழகா இருக்கு விஜி..

குறையொன்றுமில்லை. said...

ஏன் விநாயகர் இவ்வளவு தாமதமாக வந்திருக்கார். படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு வாழ்த்துகள்.

குறையொன்றுமில்லை. said...

எங்க வீட்டு சதுர்த்தி பூஜைக்கு உங்களை அழைக்க நினைத்தேன் சாந்தியிடம் கூட கேட்டேன் தானாவில்தான் பூஜை 5 நாட்களுக்கு இருந்தது. உங்க காண்டாக்ட் நம்பர்தெரியல்லே நானும் திருனவேலிதான். மும்பையில் வேரயாரானும் ப்ளாக்கர் இருக்காங்களான்னு சாந்தியிடம்தான் கேட்டேன். நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா மேட் பண்ணலாம்னு நினைக்கிரேன் மெயில் ஐடி கொடுத்தால் தொடர்புகொள்கிரேன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புச்சகோதரி,

அருமை. வெகு அருமை. படங்கள் எல்லாம் அழகோ அழகு.

என் இஷ்டதெய்வமும் விநாயகரே.

மும்பையின் பிரபலமான விநாயகர் கோயிலுக்கு நானும் நேரில் வந்து தரிஸித்துள்ளேன்.

இங்கு அடிக்கடி மிந்தடை. இப்போதும் கூட மின்தடை தான். இன்வெட்டெர் உதவியால் லேப்டாப்பில் இருட்டு அறையில் விசிறியும் டார்ச் லைட்டும் வைத்துக்கொண்டு இதை டைப்புகிறேன்.

பாராட்டுக்கள். என் புதுப்பதிவுக்கு நீங்க வந்துள்ளீர்களா என்றே இன்னும் நான் பார்க்கவில்லை.

அன்புடன்
VGK

திண்டுக்கல் தனபாலன் said...

அசர வைக்கும் படங்கள்...

சிறப்பான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்... நன்றி...

மாதேவி said...

விநாயகர் அழகாக இருக்கின்றார்.

இராஜராஜேஸ்வரி said...

அருமையான படங்களுக்கும் பகிர்வுகளுக்கும் பாராட்டுக்கள்..

மனோ சாமிநாதன் said...

படங்களும் பகிர்வும் அருமை விஜி!

அம்பாளடியாள் said...

வணக்கம் சகோதரி இன்றுதான் தங்கள் தளத்திற்கு முதன்முறையாக
வந்துள்ளேன் .சிறப்பான ஆக்கங்களை வெளியிடும் தங்கள் முயற்சி
மென்மேலும் வளம்பெற வாழ்த்தி உங்கள் ஆக்கங்களைப் பின் தொடர்கின்றேன் சந்தர்ப்பம் அமையும்போது தங்கள் ஆக்கங்களையும் வாசித்து மகிழ்வேன் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

Radha rani said...

உள்ளங்கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!

Radha rani said...

விஜி.. வலை பக்கமே பார்க்க முடியல்லை. சீக்கிரம் ஏதாச்சும் பதிவை போடுங்க.