தேவையான பொருட்கள் :
கோழிகறி - 1/2 கிலோ
வெங்காயம் -3
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மிளகாய் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி பொடி - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பட்டை, கிராம்பு, மிளகு - சிறிதளவு
சோம்பு - 1டீஸ்பூன்
இஞ்சி , பூண்டு - நறுக்கியது சிறிது
கலர் பொடி - சிறிது
பொட்டுகடலை மாவு - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை நடிவில் வகுந்து வைக்கவும்.
பின்னர் குக்கரில் சுத்தம் செய்த சிக்கன் , வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், மிளகாய் பொடி, மல்லி பொடி, மஞ்சள் பொடி, இஞ்சிபூண்டு விழுது, சிறிது கருவேப்பிலை, உப்பு , 1 ஸ்பூன் எண்ணெய், மிளகு 10, (பட்டை, கிராம்பு அரைத்து பொடியாகவும் சேர்க்கலாம்) பட்டை, கிராம்பு சிறிது அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சிக்கனுடன் பிரட்டி 5 நிமிடம் ஊறவைக்கவும் .
அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பிரட்டி விட்டு பின்னர் குக்கரை நன்றாக மூடி வைக்கவும். குக்கரில் ஆவி வந்தவுடன் வெயிட்டை போடவும். பின்னர் மூன்று விசில் வந்தவுடன் இறக்கிவிடலாம். இப்பொழுது கறியுடன் மசாலாக்கள் எல்லாம் சேர்ந்து நன்றாக வெந்து இருக்கும் .
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு சோம்பு, சிறிது மசாலா பொடி (பட்டை, கிராம்பு) , நறுக்கிய இஞ்சி பூண்டு ஆகியவைகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதங்கிய பின் குக்கரில் இருக்கும் சிக்கனை அதில் சேர்க்கவும் , அதனுடன் சிறிது கலர் பொடியை சேர்த்து நன்றாக பிரட்டி விடவும். வெந்த சிக்கனிலும் தண்ணீர் இருக்கும் .( தண்ணீர் நமக்கு தேவைபட்டால் சேர்த்துகொள்ளலாம் .) சிறிது நேரம் மூடி வைக்கவும். பிறகு அதனுடன் பொட்டுக்கடலை மாவை சேர்த்து பிரட்டிவிடவும் . பின்னர் தண்ணீர் சுண்டியவுடன் மல்லிதழையை தூவி அடுப்பை அணைக்கவும்...
இப்பொழுது குக்கர் சிக்கன் கிரேவி ரெடி. இதனை சாதம், சப்பாத்தி,
தோசை ஆகியவைகளுடன் சேர்த்து சாப்பிடலாம்... மிகவும் அருமையான சுவைமிகுந்த சிக்கன் கிரேவி ரெடி.
குறிப்பு: கிரேவியாக வேடுமென்றால் இப்படி தண்ணீர் சேர்த்து செய்து கொள்ளலாம் . வறுவலாக வேண்டும் என்றால் தண்ணீர் சேர்க்காமல் வறுத்து கொள்ளலாம்.சுவையான குக்கர் சிக்கன் வறுவல் கிடைக்கும்.
மருத்துவ பயன்கள்:
- தூதுவலை இலையைப் பறித்து நன்றாக கழுவி தண்ணீர் வற்றும் வரை உலரவிடுங்கள். பின்னர் அந்த இலையை எண்ணெய்யில் (அல்லது) நெய்யில் நன்றாக பொரித்து தினமும் 10 இலை சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை, இருமல், ஜலதோஷம் இருப்பவர்களுக்கு நல்லது. விரைவில் குணமடையும்.
பழமொழி:
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு
உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க.
உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க.