Saturday, June 16, 2012

பீட்ரூட் பால்கறி - BEET ROOT PAAL CURRY



தேவையான பொருட்கள் :
பீட்ரூட் - 100
தேங்காய் -1/2 மூடி துருவல் 
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் -3
மிகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
மஞ்சள் தூள்  - 1/2 டீஸ்பூன் 
கடுகு - 1 டீஸ்பூன் 
சோம்பு - 1/2 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - 1 இனுக்கு 


செய்முறை:

              தேங்காய் துருவலை பிழிந்து கட்டியான பால் எடுத்து வைக்கவும். 
பின் அத்துருவலை அரைத்து நன்றாக பிழிந்து  வடிகட்டி பால்
எடுத்துக்கொள்ளவும்.


              பீட்ரூட் ,வெங்காயம் , தக்காளி இவைகளை நறுக்கி வைக்கவும் . 
பச்சை  மிளகாயை வகுந்து கொள்ளவும் . மேலே குறிப்பிட்டுள்ள
அனைத்தையும்   தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.






             முதலில்  பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடான பின் கடுகு, சோம்பு போட்டு பொரிந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். 
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் , தக்காளி , கறிவேப்பிலை
சேர்த்து நன்றாக வதங்கிய பின் பீட்ரூட்டையும் சேர்த்து  வதக்கவும்.


            அதனுடன்  மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் ,மல்லித் தூள் ,உப்பு சேர்க்கவும். இப்பொழுது இரண்டாவதாக எடுத்து வைத்த தேங்காய் பாலை ஊற்றவும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக 
கொதிக்கவிடவும். பின் முதலில் எடுத்த பாலை ஊற்றி ஒருகொதி விட்டு இறக்கவும். இப்பொழுது பீட்ரூட் பால்கறி ரெடி.



குறிப்பு:

              பீட்ரூட் பால்கறியை சாதம் , பூரி , தோசை இவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம் .மிகவும் சுவையாக இருக்கும்.


மருத்துவ பயன்கள் :

  • பீட்ரூட்  அதி விரைவு ஜீரணத்தை  உண்டாக்கும் . மேனி அழகைக் கூட்டும்.
  • பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் அல்சர் குணமாகும்.
  • பீட்ரூட்  கஷாயம் இரத்தசோகையை தடுக்கும்.
  • தேங்காய்பால் நஞ்சு முறிவாக பயன்படுத்தப்படுகிறது.


11 comments:

Usha Srikumar said...

Looks appetising and inviting :)))

Radha rani said...

பீட்ரூட் பால்கறி நல்லா இருக்கு..மருத்துவ தகவல்களும் மிக அருமை..

நிரஞ்சனா said...

ஆஹா...ப்ராப்ளம் சரியாய்டுச்சா விஜி..? மீண்டும் பாக்கறதுல மகிழ்ச்சி. இந்த பீட்ரூட் பால் கறி சப்பாத்திக்கு சரியான சைட் டிஷ்ஷா இருக்கும்னு தோணுது. ட்ரை பண்ணிப் பாத்துடறேன்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

இரண்டாவது படத்தில் நறுக்கித் தயாராக உள்ள தக்காளியும் வெங்காயமும் கடைசிபடத்தில் உள்ள பூரிகளும் எனக்கு மிகவும் பிடித்தமானவை.

பீட்ரூட் எனோ எனக்கு பிடிக்காத ஓர் சமாசாரமாக உள்ளது.

மேலும் விபரங்களுக்கு என் பதிவான

“உணவே வா ... உயிரே போ”

நேரம் கிடைக்கும்போது படித்துப் பார்த்துக் கருத்துச்சொல்லுங்கோ.

இணைப்பு:

http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_26.html

vgk

VijiParthiban said...

மிக்க நன்றி உஷா அக்கா.

VijiParthiban said...

//பீட்ரூட் பால்கறி நல்லா இருக்கு..மருத்துவ தகவல்களும் மிக அருமை..//

மிக்க நன்றி ராதா ராணி அக்கா.

VijiParthiban said...

ஆமாம் நிரூ பிரச்சனை தீர்ந்தது. எனக்காக எல்லோரிடத்தும் கேட்டு எனக்கு அப்ப அப்ப பதில் அழித்த நிரூ தோழிக்கு என்னுடைய நன்றிகள்.
நிரூ சப்பாத்திக்கும் ரொம்ப நல்ல இருக்கும் செய்து பாருடாடாடாடா..........

VijiParthiban said...

ஐயா உங்களுக்கு பீட்ரூட் பிடிக்காது என்று உங்களது வலைப்பூவைப் பார்த்து படித்து தெரிந்துகொண்டேன் . என்னுடைய மற்ற படங்களை பார்த்து உங்களுக்கு பிடித்த உணவுகளுடன் ஒப்பிட்டு பாராட்டியதற்கு மிக்க நன்றி ஐயா.

Asiya Omar said...

பீட்ரூட்டில் பால்கறியா? சூப்பர்.

VijiParthiban said...

மிக்க நன்றி ஆசியா அக்கா.

Usha Srikumar said...

Visit my site for a surprise
http://ushasrikumar.blogspot.in/2012/06/awesome-blogger-award-from-ranjana.html