Tuesday, May 29, 2012

கேரட் காளிபிளவர் தண்டு பொரியல் - CARROT CAULIFLOWER THANDU PORIYAL



தேவையான பொருட்கள்:

கேரட் - 100 கிராம் 
காளிபிளவர் தண்டு  - 100 கிராம் 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன் 
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் 
சீரகத்  தூள்  - 1/2 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
உப்பு - தேவையான அளவு 
கடுகு - 1 டீஸ்பூன் 
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன் 
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் 

செய்முறை:


              முதலில் கேரட் , காளிபிளவர் தண்டு   இரண்டையும்  நன்றாக கழுவி பொடியாக நறுக்கிகொள்ளவும்.  வெங்காயத்தையும்  நறுக்கி வைக்கவும்.



               மேலே குறிப்பிட்ட தேவையான  பொருட்கள் அனைத்தையும்
 எடுத்துக்கொள்ளவும்.


              வானலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உளுத்தம்பருப்பு போட்டு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து  பொன்னிறமாகும் 
வரை வதக்கி அதனுடன் நறுக்கிய காளிபிளவர்  தண்டு  ,கேரட் 
சேர்த்து வதக்கவும். 
   

            அத்துடன் மேற்கூறிய மசாலாப்பொருட்களான மஞ்சள் தூள் , மிளகாய் தூள், மல்லித் தூள் , ஜீரகத் தூள் , உப்பு சேர்த்து பிரட்டிவிடவும்  அதனுடன் காய் வேகும் அளவிற்கு தண்ணீர்  சேர்த்து உப்பு சரிபார்த்து 
குறைந்த தீயில் நன்றாக வேகவிடவும் . பிரட்டி விடவும், தண்ணீர் சுண்டி 
காய்வெந்தபிறகு இறக்கி  வைத்துவிடவும். 
                   இப்பொழுது கேரட் காளிபிளவர் தண்டு பொரியல் ரெடி.





குறிப்பு: காளிபிளவர் தண்டு வேக கொஞ்சம் நேரமாகும் அதனால் 
சிறிது தண்ணீர் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.





மருத்துவ பயன்கள்:


  • கேரட்டில் வைட்டமின் 'எ'  இருப்பதால் உடலுக்கும் , கண்களுக்கும்  ரொம்ப நல்லது.
  • கேரட் இரத்தத்தை சுத்தப்படுத்தும் அதனால் உடலுக்கு புத்துணர்ச்சி (எனர்ஜி), மேனி பளபளப்பு  கூடும் .
  • கேரட்டிற்கு கொழுப்பை கரைக்கும் திறன் உண்டு . வயிற்று புண் வராமலும் தடுக்கும். 
  • காளிபிளவரில் வைட்டமின் 'இ' சத்து இருப்பதால் சிறுநீர்பை,  சிறுநீரகம்   போன்றவற்றில்  எவ்வித பாதிப்பும்  இல்லாமல் பாதுகாக்கும். 
  • திசுக்கள், நகம் வளர்ச்சிக்கும் காளிபிளவரில்  உள்ள வைட்டமின் 'இ' பயன்படுகிறது.


Wednesday, May 23, 2012

வெண்டைக்காய் பால்கறி - VENDAIKKAI ( LADY'S FINGER ) PAAL CURRY


தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் -150 கிராம் 
தேங்காய்        -  1/2 மூடி 
வெங்காயம் - 1
தக்காளி    -   1
பச்சை மிளகாய் - 2
உப்பு -  தேவையான அளவு 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மல்லி தூள் -  2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள்  -  1/2 டீஸ்பூன் 
கடுகு - 1 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
எண்ணெய்   - 2 டேபிள்ஸ்பூன் 




செய்முறை:
    
                   வெண்டைக்காய் பால்கறி செய்வது பற்றி பார்ப்போம் .


                               


                        முதலில் வெண்டைக்காயை கழுவி வைக்கவும்.  ( தண்ணீருடன் நறுக்கினால் வழ  வழ  கொழ  கொழ வென வரும் ). 
ஆகையால்  காயிலுள்ள    தண்ணீர்  காய்ந்த பின் நறுக்கிகொள்ளவும். 
லேசாக ( 5 நிமிடம் ) வெண்டைக்காயை வதக்கி வைக்கவும். 




                       தேங்காயை துருவி அதை  முதலில் பிழிந்து கட்டியாக முதல்  
பால் எடுத்துக்கொள்ளவும் . பின்பு அந்த தேங்காய் துருவலை மிக்சியில் அரைத்து ( பிழிந்து )  இரண்டாம் பால் எடுத்துக்கொள்ளவும். மறுபடியும் 
அத்துருவலில்  தண்ணீர் தெளித்து பிழிந்து எடுக்கவும் மூன்றாம் பால் . 




                       
                      வெங்காயம் , தக்காளியை நறுக்கி,  பின் பச்சைமிளகாயை
நடுவில் கீரிகொண்டு  மேலே குறிப்பிட்ட  தேவையான  பொருட்கள் 
அனைத்தையும் தயாராக எடுத்துக்கொள்ளவும்.





                       கடாயில்  எண்ணெய் ஊற்றி கடுகு போடவும் பொரிந்ததும்  
பச்சை மிளகாய், வெங்காயம்  சேர்த்து வதக்கவும். பின் தக்காளி கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.


                      வதங்கியபின்பு வெண்டைக்காயை சேர்க்கவும் . அதனுடன் 
மிளகாய் தூள்,  மல்லி தூள்,   மஞ்சள் தூள், உப்பு சேர்த்து  பிரட்டிவிடவும் .
தேங்காய் பாலில் இரண்டாம் மற்றும்  மூன்றாம் பாலையும் அதனுடன்
ஊற்றி  உப்பு சரிபார்த்து மூடிவிடவும்.  நன்றாக கொதித்த பின்பு 
தனியாக வைத்திருக்கும்  தேங்காய் முதல் பாலை அதனுடன் சேர்த்து 
ஒரு கொதி வந்த பிறகு இறக்கிவிடவும்.
                                 சுவையான வெண்டைக்காய் பால்கறி ரெடி.



நான்   வெண்டைக்காய் பால்கறி  செய்து கருணைகிழங்கு வறுவல் 
செய்தேன்  சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருந்தது . அதனுடன் அப்பளமும் பொரித்து சாப்பிட்டோம் என்றால் 
மிக மிக சுவையாக இருக்கும் .





 குறிப்பு:  தேங்காய் பால் மூன்று விதமாக எடுக்க இயலாதவர்கள் 
முதலில் தேங்காயை பிழிந்து கட்டி பால் எடுக்கவும் . பின் அதனை 
அரைத்து நன்றாக வடித்து பால் எடுத்து வைக்கலாம் . 


மருத்துவ குறிப்புகள் :

  • தேங்காய் பால் வயிற்று புண்ணை  ஆற்றும் தண்மை கொண்டது.  
  • தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் ( Ulcer ) வயிற்றுப் புண்ணுக்கு  தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. இதில்  உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளதால்  இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது. 
  •  தேங்காயிலிருந்து எடுக்கப்படும்  எண்ணெய், தேங்காய் பால் போன்றவை அழகுப் பொருளாகவும், கூந்தலை பாதுகாக்கும் பொருளாகவும் விளங்குகிறது.
  •  உடல் வலிமைக்கு தேங்காய்ப் பால் நல்லது.
  •  நஞ்சு முறிவாகப் தேங்காய்ப் பால் பயன்படுத்தப்படுகிறது.




     

    Monday, May 21, 2012

    கக்கரிக்காய் பொரியல் - CUCUMBER PORIYAL

    தேவையான பொருட்கள் :

    கக்கரிக்காய்            -  100 கிராம் 
    வெங்காயம்             -  1
    மிளகாய் வற்றல்  -  2
    மஞ்சள் தூள்  -  1/2 டீஸ்பூன் 
    கடுகு   -  1 டீஸ்பூன் 
    உளுத்தம் பருப்பு   -  1 டீஸ்பூன் 
    கறிவேப்பிலை      -  சிறிது 
    உப்பு     -  தேவையான அளவு 
    தேங்காய் துருவல் -  1   டேபிள் டீஸ்பூன் 
    எண்ணெய்   - 2 டேபிள் டீஸ்பூன்


    செய்முறை:



    முதலில் கக்கரிக்காயை  கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம் நறுக்கி எடுக்கவும் . பின்பு தேவையான பொருட்கள் 
    அனைத்தையும் எடுத்து வைக்கவும்.




                      கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானபின் கடுகு
    உளுத்தம்பருப்பு சேர்த்து பொரிந்ததும் காய்ந்த மிளகாயை 
    கில்லி போடவும். பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். 
    கறிவேப்பிலை சேர்க்கவும். 

           அதனோடு கக்கரிக்காயை போட்டு தேவையான அளவு உப்பு,
    மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின் சிறிது நேரம் மூடிவைக்கவும்.


           அந்த  மூடியிலிருந்து வடியும் நீரே அது வேகுவதற்கு 
    போதுமானது. மூடியை எடுத்து விட்டு மறுபடியும் பிரட்டி விடவும் 
    இப்பொழு காய்  வெந்துள்ளதா என்று பார்க்கவும்.வெந்ததும் இறக்கி அதன் மேல் தேங்காய் துருவல்,கொத்தமல்லி இலையை தூவி பரிமாறலாம்.
          இப்பொழுது சுவையான கக்கரிக்காய்  பொரியல் ரெடி
       




    குறிப்பு:கக்கரிக்காய் தாளிக்கும் பொழுது 1 டேபிள்ஸ்பூன் கடலைபருப்பு 
    சேர்த்து கொண்டால் மிகவும் அருமையாக இருக்கும்.  கடலைபருப்பு
    சேர்த்துகொண்டால் சிறிது தண்ணீர் தெளித்து விடவும்.


    மருத்துவ பயன்கள் :

    •  கக்கரிக்காய் மிகவும் குளிர்ச்சி தண்மை  கொண்டது. நம் உடலின் வெப்பத்தை அது குறைக்கும். பொதுவாக வெயில்  காலங்களில் அதிகமாக நாம் உபயோகிக்க வேண்டும் . 
    •  வெங்காயத்தை உள்ளங் கை, கன்னங்கள், வயிறு, குதி கால் போன்ற இடங்களில் தடவிக்கொண்டால்  வெயிலில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படும் வெப்பத் தாக்கிலிருந்து தப்ப விடலாம் .
    • வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம்.
    • வெங்காயத்தில் உள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் இரத்தத்தை கொழுப்பு இல்லாமல்  ஓடவைக்க உதவி செய்கிறது.



    Saturday, May 19, 2012

    வெண்டைக்காய் பொரியல் - LADY'S FINGER PORIYAL


    தேவையான பெருட்கள்:

    வெண்டைக்காய் - 200
    வெங்காயம்  -  1
    மிளக்காய் தூள்  - 1 டீஸ்பூன் 
    மஞ்சள்   தூள் - 1/2 டீஸ்பூன் 
    கடுகு                   -  1/2 டீஸ்பூன் 
    உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன் 
    கறிவேப்பிலை  - சிறிது 
    உப்பு                    -  தேவையான அளவு 
    தேங்காய் துருவல் -  1 டேபிள் டீஸ்பூன் 
    எண்ணெய்       - 2 டேபிள் டீஸ்பூன் 



    செய்முறை:

        முதலில் வெண்டைக்காயை கழுவி காயவைத்து நறுக்கிகொள்ளவும்.அதனை ஒரு கடாயில் போட்டு லேசான தீயில் 
    வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

        பின்பு வெங்காயத்தை பொடியாக நறுக்கிய கொள்ளவும்.
    தேவையான  பொருட்கள் அனைத்தையும் தயராக வைக்கவும்.




        கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு போடவும்.
    வெடித்ததும் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பின் 
    வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி மூடவும். 

        பின் திறந்து பிரட்டி    அடிபிடிக்காமல்  வதக்கவும்  பின்பு  
    தேங்காய்  துருவலை  சேர்த்து  இறக்கி பரிமாறவும். 
                                    வெண்டைக்காய் பொரியல் ரெடி.  
        
      



    குறிப்பு : வெண்டைக்காய் பொரியலை சாம்பார் சாதம்  , ரசம் சாதத்துடன் 
    சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.  

    வெண்டைக்காயின் மருத்துவ பயன்கள் : 
    •  இது மிகவும் குளிர்ச்சியானது.  உடல் எடைகுறையவும், உடலின் வெப்பத்தை குறைக்கவும் பயன்படுகிறது .
    • விட்டமீன் ,கால்சியம் , நார்சத்து அதிகம் இருப்பதால் இதனை எல்லோரும் சாப்பிடலாம் .
    • வெண்டைக்காய் அழகை  கூட்டும் .
                              



     

    Tuesday, May 15, 2012

    வெந்தயக்கீரை சாம்பார் - VENDHAYA ( METHI ) KEERAI SAMBAR



     தேவையான பொருட்கள் :


    வெந்தயக்கீரை  -  1 கட்டு 
    துவரம் பருப்பு  -  100 கிராம் 
    வெங்காயம்  - 1
    தக்காளி  -  1
    பச்சை மிளகாய் - 4 
    காய்ந்த மிளகாய் - 2
    புளி        - சிறிய எலுமிச்சை அளவு
    பெருங்காயப்பொடி - சிறிது 
    மஞ்சள்பொடி  -  1 டீஸ்பூன்
    உப்பு  -  தேவையான அளவு 
    தட்டிய பூண்டு  -  5 பல்  
    கறிவேப்பிலை  - 2 இனுக்கு 
    கடுகு  -  1 டீஸ்பூன் 
    எண்ணெய் -  தாளிக்க தேவையான அளவு 


    செய்முறை:

                  முதலில் துவரம்பருப்பை உறவைக்கவும். வெங்காயம் ,
    தக்காளியை நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை  நடுவில் 
    வகுந்து வைக்கவும்.  

                          


                பிறகு பருப்புடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், 
    பூண்டு ,  பெருங்காயப்பொடி , மஞ்சள் போடி , சிறிது  கறிவேப்பிலை 
    இவை அனைத்தையும்  சேர்த்து பருப்பை  வேகவைக்கவும்.  பருப்பு 
    நன்றாக வேகட்டும் .

                      

             வெந்தயக்கீரையை சுத்தம் செய்து நன்றாக கழுவி எடுத்து அதனை
    பொடியாக  நறுக்கிகொள்ளவும். 


          

             பருப்பு வெந்தபிறகு நறுக்கிய கீரையை சேர்க்கவும். பின்
    புளிக்கரைச்சல்,  உப்பு சேர்த்து சிறிது நேரம் வேகவிடவும்.  வெந்தபிறகு 
    சூட்டை மிதமாக வைக்கவும்.

           ஒரு கடாயில்  எண்ணெய்  விட்டு சூடான பிறகு கடுகு சேர்த்து
    வெடித்தும் காய்ந்த மிளகாயை போடவும் . பின் சிறிது 
    வெங்காயம் , கறிவேப்பிலை சேர்த்து  வதக்கவும் . வதங்கிய பின் 
    வெந்த பருப்புக்கீரையில் சேர்க்கவும் . சிறிது நேரம் கழித்து 
    இறக்கிவிடவும். அருமையான வெந்தயக்கீரை சாம்பார் ரெடி. 



    குறிப்பு :  சிறிது தேங்காய் ,சோம்பு  சேர்த்து அரைத்து தேவையானால் இதனுடன் சேர்த்துகொள்ளலாம். நான் தேங்காய் சேர்க்கவில்லை.
                      மிகவும் அருமையாக இருக்கும் வெந்தயக்கீரை சாம்பார்.
     

    வெந்தயக்கீரையின் பயன்கள் :

    • மிகவும் குளிர்ச்சியானது . உடலின் வெப்பத்தை கட்டுப்படுத்தும் . 
    • நம் உடலுக்கு தேவையான பல உயிர் சத்துக்கள் இதில் உள்ளன (புரதம், மெக்னீசியம் ,பொட்டாசியம், பாஸ்பரஸ் ).
    • இக்கீரையை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு , இரத்த மூலம் போன்ற உடல்  உபாதைகள் நீங்கும்.
    • வாரத்தில் மூன்று  அல்லது நன்கு முறை வெந்தயக்கீரை    சாப்பிட்டால் சர்க்கரை (DIABETES ) வியாதி குணமாகும் . 


    Saturday, May 12, 2012

    உருளைக்கிழங்கு வறுவல் - POTATO FRY

    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு  - 2
    மஞ்சள் தூள்      -  1/2 டீஸ்பூன் 
    உப்பு                 -  தேவையான அளவு 
    மிளகாய் தூள்  - 1 டேபிள்ஸ்பூன் 
    பூண்டு        -  5 பல் 
    கறிவேப்பிலை - சிறிது 
    கடுகு          -  1  டீஸ்பூன் 
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் 


    செய்முறை :

                    முதலில்   உருளைக்கிழங்கை   தண்ணீரில்    போட்டு 
    வேகவைத்துகொள்ளவும் . வெந்த கிழங்கை தோல்நீக்கி வறுவலுக்கு  ஏற்றபடி  நறுக்கி வைக்கவும். 



                   நறுக்கிய கிழங்குடன்  மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, பூண்டு 
    ( பூண்டை நசுக்கி ( தட்டி ) )  இவை   அனைத்தையும்    சேர்த்து  பிசைந்து  வைக்கவும். 



                 சிறிது நேரத்திற்கு பிறகு கடாயில்  எண்ணெய்   ஊற்றி 
    சூடானபின் கடுகு போட்டு வெடித்ததும் கறிவேப்பிலை போடவும். 
    பிறகு மசாலாபிரட்டிய உருளைக்கிழங்கை சேர்த்து மிதமான சூட்டில்  வேகவிடவும். 

               பிரட்டிவிட்டு சிறிதுநேரம் சூட்டில்  இருக்கட்டும் .வறுவலான பின் இறக்கிவிடவும். உருளைக்கிழங்கு வறுவல் ரெடி.






    குறிப்பு : எண்ணெய் ஊற்றும் போது சிறிது சிறிதாக ஊற்றி உருளைக்கிழங்கை பிரட்டிவிடவும்.  

        சாம்பார் சாதம், ரசம் இவற்றுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு உருளைக்கிழங்கு வறுவல் மிகவும் அருமையாக இருக்கும் .


     



    Friday, May 11, 2012

    கார குழம்பு - KAARA KUZHAMBU



    தேவையான பொருட்கள் :

    வெங்காயம்          - 1  பெரியது 
    தக்காளி                  - 1  
    பூண்டு                     -  10 பல் 
    புளி                          - பெரிய எலுமிச்சை அளவு 
    மிளகாய் தூள்   - 1 டேபிள்ஸ்பூன் 
    மல்லித் தூள்   - 2 டேபிள்ஸ்பூன் 
    மஞ்சள் தூள்   - 1 டீஸ்பூன் 
    மிளகுத் தூள்   - 1 டீஸ்பூன் 
    உப்பு           - தேவையான அளவு 
    வெந்தயம்      - 1 டேபிள்டீஸ்பூன் 
    கறிவேப்பிலை  - 2 இனுக்கு 
    எண்ணெய்               - தாளிக்க தேவையான அளவு 
    நல்லெண்ணெய்  - 3 டேபிள்ஸ்பூன் 

    செய்முறை :

    வீட்டில் காய்கள் எதுவும் இல்லை என்றால் கவலை வேண்டாம் உடனே ஈசியான கார குழம்பு  வைத்துவிடலாம் .  வாங்க வைக்கும் முறை பற்றி பார்ப்போம் .

            முதலில் புளியை தண்ணீரில் உறவைத்து புளிக்கரைச்சலை தயார் 
    செய்யவும் .  வெங்காயம் , தக்காளி , பூண்டு  அனைத்தையும் 
    பொடியாக நறுக்கி தனித்தனியாக வைக்கவும். 



            புளிக்கரைச்சலுடன்  மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள்,உப்பு  இவை அனைத்தையும் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

       பாத்திரத்தில் எண்ணெய்  ஊற்றி சூடான பின் வெந்தயம் போட்டு  ,
    பிறகு பூண்டு சேர்த்து வதக்கவும் .பின்  வெங்காயம்  சேர்க்கவும் .
    வெங்காயம் வதங்கிய பிறகு  கறிவேப்பிலை , தக்காளியை  சேர்த்து  வதக்கவும் .

           அதன் பிறகு புளிக்கரைச்சலை (மசாலாக்கரைச்சல் ) சேர்த்து 
    கிண்டிவிட்டு  மூடிவைக்கவும் . நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கொதித்தபின்பு இறக்கிவிடவும் .




           கார குழம்புடன் அப்பளம் , முட்டை , காய் (கோஸ் , புடலங்காய் ) பொறியல்   சேர்த்து  சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும் .

           குறிப்பு : கார குழம்பு ரொம்ப தண்ணீயாக போய்விட்டால் கவலை  வேண்டாம்  உடனே சிறிதளவு வறுகடலையை பொடியாக  நுனிக்கி சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும் .
          
              
            






    Saturday, May 5, 2012

    இறால் உருளைக்கிழங்கு கிரேவி - PRAWNS POTATO GRAVY



    தேவையான பொருட்கள் :

    இறால்  - 1/2 கிலோ 
    உருளைக்கிழங்கு  - 2 
    வெங்காயம்  -  2
    தக்காளி  - 2
    பச்சை மிளகாய் - 2
    சோம்பு தூள் - 1 டீஸ்பூன் 
    சீரகத் தூள்  - 1 டீஸ்பூன் 
    மிளகுத் தூள் -  1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
    மிளகாய் தூள்  -  11/2  டேபிள்ஸ்பூன் 
    உப்பு  -  தேவையான அளவு 
    கறிவேப்பிலை , மல்லிதழை   - சிறிதளவு 
    இஞ்சி பூண்டு பேஸ்ட்  - 1 டேபிள்ஸ்பூன்  
    தேங்காய்   -  3 டேபிள்ஸ்பூன் 
    சோம்பு  -  1 டீஸ்பூன் 
    பட்ட கிராம்பு  -  சிறிதளவு 
    எண்ணெய்  - தாளிக்க தேவையான அளவு 

    செய்முறை :



            முதலில் இறாலை தோல்நீக்கி கழுவி சுத்தம் செய்து கொள்ளவேண்டும். 



    அதனுடன் சீராகத் தூள், சோம்பு தூள்,மஞ்சள் தூள், மிளகுத்தூள், மிளகாய் தூள்,  உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து அரை மணி 
    நேரமாவது ஊறவைக்கவேண்டும். 
     


           வெங்காயம்,  தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கிகொண்டு, பச்சை
    மிளகாயை நடுவில் கீறி வைக்கவும் . உருளைக்கிழங்கை நறுக்கி    வைக்கவேண்டும். இஞ்சி பூண்டு விழுது அரைத்து எடுக்கவும்.
    கொத்தமல்லிதழை பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
    தேங்காயுடன் சிறிது சோம்பு சேர்த்து அரைத்து  வைக்கவும். 





       கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானபின்பு சோம்பு, பட்ட கிராம்பு போடவும் , பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு  சிறிதுநேரம் வதங்கியபின் கறிவேப்பிலை, தக்காளியை சேர்த்து வதக்கி , இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.

          வதங்கியபின்பு  நறுக்கிய
    உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக பிரட்டி தண்ணீர் தெளித்து சிறிது நேரம் மூடிவைக்கவும். உருளைக்கிழங்கு சற்று வெந்த பின்பு இறாலை போட்டு பிரட்டிவிடவும் அதனுடன் அரைத்த தேங்காய் விழுதைபோட்டு 
    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சரிபார்த்து மூடிவிடவும். சற்று நேரத்திற்கு பின் மறுபடியும் பிரட்டிவிட்டு வெந்ததும் இறக்கிவிடவும். மல்லிதழையை தூவி  சிறிது நேரம் மூடிவைத்து 
    அதன் பிறகு பரிமாறவும் . 



                  சாதம் ,  சப்பாத்தியுடன்  சாப்பிடுவதற்கு உருளைக்கிழங்கு கிரேவி
     மிகவும் அருமையாக இருக்கும் .  






    உருளைக்கிழங்கு கிரேவி ரெடி