தேவையான பொருட்கள் :
பீட்ருட் - 200 கிராம்
வெங்காயம் - 1
கடலைபருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பச்சமிளகாய் - 3
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
முதலில் பீட்ருட் தோல்நீக்கி கழுவி பொடியாக நறுக்கவும், வெங்காயத்தையும் அதே சைசில் நறுக்கிகொள்ளவும், பச்சமிளகாயை நடுவில் கீறிகொள்ளவும். மேலே குறிப்பிட்ட பொருட்களை தயாராக எடுத்துக்கொள்ளவும் .
பின்பு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும் ,பச்சமிளகாய் போடவும் பின் வெங்காயத்தை சேர்த்து சிறிதுநேரம் வதக்கவும் அதனுடன் கடலைபருப்பையும் , கறிவேப்பிலையும் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின்பு பீட்ருட்டை சேர்த்து பிரட்டிவிடவும் .அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடிவிடவும்.
சிறிதுநேரத்திற்கு பிறகு ஒரு பிரட்டு பிரட்டி விட்டு தண்ணீர் சுண்டியவுடன் தேங்காய் துருவலை சேர்த்து பிரட்டி இறக்கவும். பீட்ருட் பொரியல் ரெடி.
பீட்ருட் பொரியல்
தேங்காய் துருவல் தேவைபட்டால் மட்டும் சேர்த்துக்கொள்ளலாம். நான் தேங்காய் துருவல் சேர்க்கவில்லை.