Friday, December 9, 2011

கார்த்திகை விளக்கின் தத்துவம்

கார்த்திகை விளக்கின் தத்துவம்


       *எண்ணெய் கரைகிறது, திரி கரிகிறது. ஆம்...தீபம் என்பது தன்னை கரைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு ஒளி வழங்குகிறது. பிறர்நலம் பேணுவதற்காக தன் உயிரையே தியாகம் செய்ய வேண்டும் என்பது கார்த்திகை விளக்கின் தத்துவம். அது மட்டுமல்ல! தீபத்தின் ஒளி மனிதர்களுக்கு மட்டுமல்ல, பிற உயிரினங்களின் மீதும், உயிரற்ற பொருட்கள் மீதும் படுகிறது. புழு, கொசு, நிலம், நீர்வாழ் பிராணிகள் மீதெல்லாம் படுகிறது. தீபஒளி எப்படி எல்லார் மீதும் பரவுகிறதோ, அதுபோல் மனிதனின் மனதில் எழும் அன்பு ஒளி எல்லார் மீதும் பட வேண்டும் என்பதையே கார்த்திகை தீபம் நமக்கு உணர்த்துகிறது.


Source : Dinamalar Dialy News

Saturday, December 3, 2011

NEYYAPPAM SWEET

நெய்யப்பம்


                          


தேவையான பொருட்கள்:

       பச்சரிசி     -   1/2  கிலோ 
      கருப்பட்டி  -  300 கிராம்
      பூவன் வாழைப்பழம் - 1 
     சுக்கு , ஏலக்காய் -  தேவையான அளவு
     நெய் - 50 கிராம்
     தேங்காய் எண்ணெய் -  தேவையான அளவு

செய்முறை:

                    அரிசியை ஊறவைத்து புட்டுமாவு பதத்தில் மொறு 

மொறுப்பாக அரைக்கவும் .   ஏலம் ,  சுக்கைப் பொடித்துக் 

கொள்ளவும் .  கருப்பட்டியில் 1 குவளை தண்ணீர் ஊற்றி 

பாகு காய்ச்சி ,  அதில் பொடித்த  ஏலம் , சுக்கு , அரைத்த மாவு ,

வாழைப்பழம் , நெய் அனைத்தையும் சேர்த்து பிசைந்து

கரண்டியில் எடுத்து ஊற்றும் பதத்துக்கு கரைத்து , மூன்று

மணி நேரம்  புளிக்க வைக்கவும் . பின்னர் ஒரு ஒரு கரண்டியாக  

ஊற்றி தேங்காய்  எண்ணெயில்  பொரித்தேடுக்கவும் .
  


 "  நெய்யப்பம் தயார்  "