தேவையான பொருட்கள்:
அன்னாசி பழம் அரைத்தது - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
நெய் - 3 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 6
பாதாம் பருப்பு - 4
செய்முறை:
நன்கு பழுத்த அன்னாசி பழத்தை தோல் நீக்கிவிட்டு நறுக்கி தேவையானதை எடுத்து மிக்சியில் அரைத்து வைத்து கொள்ளவும்.
மேற்சொன்ன பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைக்கவும்.
நான்ஸ்டிக் பானில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் நறுக்கிய முந்திரி, பாதாம் பருப்பையும் லேசாக பொரித்து தனியாக எடுத்துவைக்கவும். பின்னர் அதே பானில் இருக்கும் நெய்யுடன் இன்னும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து காய்ந்ததும்
அரைத்த பைனாப்பிள் விழுதை சேர்த்து கிளறவும்.
மிதமான சூட்டில் இருக்கவேண்டும் கைவிடாமல் கிளறவும் பின்
சீனியை சேர்த்து சிறிது ஹல்வா கலர் பவுடர் சேர்த்து கிளறி அதனுடன் ஒரு ஸ்பூன் நெய், பொரித்தெடுத்த பருப்பையும் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி இறக்கி ஒரு பிளேட்டில் கொஞ்சம் நெய்தடவி அல்வாவை அதில் வைத்து லேசாக நெய்தடவி சிறிது மீதமுள்ள பருப்பை வைத்து தேவையான வடிவில் நறுக்கி பரிமாறலாம். அன்னாசி பழ அல்வா ரெடி.