Thursday, May 9, 2013

வெண்டைக்காய் மோர் குழம்பு - Lady fingers Butter Sauce


தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் -10
மோர்  - 1 கப்
மிளகாய் - 4 ( காரத்து கேற்ப )
தேங்காய் - 2 (3) டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மோர் மிளகாய் - 3
எண்ணெய் - தாளிக்க
கடுகு, உளுந்து  - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை , கொத்தமல்லி இலை  - சிறிது

செய்முறை:

முதலில் மிளகாய், தேங்காய், சீரகம் முதலியவைகளை அரைத்து மோருடன் சேர்த்து நன்றாக கரைத்து வைக்கவும் ( மோரை நன்றாக மத்தால் கடைந்து வைக்கவும் ).




கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து,கருவேப்பிலை , மோர் மிளகாய் சேர்த்து தாளித்து அதனுடன் வெண்டைக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும். வெண்டைகாய் நன்றாக வதங்கிய பின் மோர் கலவையை சேர்த்து சிறிது நேரத்திற்கு பின் கொதிவருவதர்க்கு முன் இறக்கி கொத்தமல்லி இலையை தூவி விடவும். கோடைக்கு  ஏற்ற வெண்டைக்காய் மோர் குழம்பு தயார்.


மோர் குழம்பு உடலுக்கு மிகவும்  நல்லது. உருளைக்கிழங்கு, வாழைக்காய்  வறுவல் , அப்பளத்துடன் ம்ம்ம்ம் சுவையாக இருக்கும் .





Monday, May 6, 2013

சப்பாத்தி உப்மா - Chapati Upma



தேவையான பொருட்கள்:

சப்பாத்தி - 4 
வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 2
கருவேப்பிலை  - 10 இலை
உப்பு - சிறிது
சில்லி வினிகர் - 1 டீஸ்பூன் 
எண்ணெய் - 2 டீஸ்பூன் 
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுந்து  - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்


செய்முறை:

முதல்நாள் சப்பாத்தி மீந்து விட்டால் கவலைவேண்டாம் ... அதனை சுவைமிகுந்த உப்மாவாக செய்து அசத்திவிடலாம்... மிக சுலபமான வேலை. 


கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு பொரிந்ததும் மிளகாய், கருவேப்பிலை , வெங்காயம் சேர்த்து வதக்கவும்.  லேசாக உப்பு சேர்த்து வதக்கலாம் ( சப்பாத்தியில் உப்பு இருக்கும் கவனமாக ).



நன்றாக வதங்கிய பின்னர் அரைத்து வைத்துள்ள சப்பாத்தியை சேர்த்து 2 நிமிடம் கிளறி  1/2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து  இறக்கி  பரிமாறவும் . வெங்காயம் கடலைப்பருப்புடன் சப்பாத்தி உப்மா சுவையாகவும், அருமையாகவும் இருக்கும்.



ஈசி கேப்பை தோசை

ஆசியா  அக்காவின் பதிவை பார்த்து செய்த ஈசி கேப்பை தோசை மிகவும் அருமையாக இருந்தது நன்றி அக்கா...




செய்முறை விளக்கம் இதோ இங்கு  ஈசி கேப்பை தோசை .

அம்ரிஷ்டரி ஃபிஷ் ஃப்ரை:



செய்முறை : இதோ கிளிக்

கிரிஸ்பி போன்லெஸ் சிக்கன் ஃப்ரை:


நான் கடலைமாவில்  தோய்த்து செய்தேன் நல்லா இருந்தது. எனது கணவர் மிகவும் விரும்பி சுவைத்தனர்... மிக்க நன்றி ஆசியா அக்கா...
நன்றி இதற்க்கு மட்டும் அல்ல என்னுடை வலைத்தளத்தில் முதன் முதலாக வருகைதந்து கருத்திட்டு என்னை உற்சாகபடுத்தியதற்கு  நன்றி அக்கா ...

திருமணத்திற்கு முன்பாக
சமையல் பக்கமே போகாத எனக்கு தங்களின் தளமும் கருத்தும் என்னை  மேன்மேலும் உற்சாக படுத்தியது ... இப்பொழுது சமையலில் ம்ம்ம்ம் மிகுந்த ஈடுபாடு வந்து விட்டது... இந்த நன்றியை ரொம்ப நாளாக சொல்லவேண்டும் என்று நினைத்தேன் இப்பொழுது தங்களின் பதிவுகளின் மூலம் தெரிவித்துள்ளேன்...

செய்முறை : இதோ இங்கு கிளிக் 

Friday, May 3, 2013

கொத்தமல்லி சட்னி , வெங்காயத் தோசை - Coriander Chutney , Onion Dosa

 


கொத்தமல்லி சட்னி:

அரைக்க தேவையான பொருட்கள்:

தேங்காய் - 3 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிது
பச்சை மிளகாய் - 2 ( காரத்திர்க்கேற்ப )
பூண்டு பல் - 1
சின்ன வெங்காயம் -  3 (4)
கருவேப்பிலை  - சிறிது
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
கருவேப்பிள்ளை

செய்முறை:

அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் தண்ணீர் சேர்த்து சட்னி பதத்திற்கு  அரைத்து ஒரு பௌலில் ஊற்றி வைத்துவிட்டு . பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கருவேப்பிலை  சேர்த்து தாளித்து சட்னியுடன் கலந்து விடவும். சுவையான கொத்தமல்லி சட்னி தயார் .

 

குறிப்பு:

புளி சிறிது சேர்த்து கொண்டாலும் நல்லா  இருக்கும்.

                                              - * -
   
வெங்காயத் தோசை

தோசை தவா காய்ந்ததும் தோசைமாவை ஒரு கரண்டி ஊற்றி
வட்டமாக சுற்றிவிட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை அதன் மேல் சேர்த்து  ( தேவையான அளவு ) சிறிது மிளகு பொடி  தூவி  எண்ணெய் ( நெய் ) தோசையின் மீது விட்டு  திருப்பி போட்டு
 வெந்ததும் எடுத்து சட்னி, சாம்பாருடன் பரிமாறலாம்.  சுவையான  வெங்காயத் தோசை ரெடி.


குறிப்பு:
வெங்காயத்தை லேசாக வதக்கிவிட்டு தோசையின் மீது தூவியும் வார்க்கலாம் . மிளகு பொடி சேர்க்காமலும் செய்யலாம் . அதன் சுவையும் நல்லா  இருக்கும்.

Thursday, May 2, 2013

பொடி தோசை - Dosai



தோசை தவா காய்ந்ததும் தோசைமாவை ஒரு கரண்டி ஊற்றி வட்டமாக சுற்றிவிட்டு ஒரு டீஸ்பூன் ( தேவையான அளவு ) இட்லி பொடியை அதன் மேல் தூவி  கொஞ்சம் எண்ணெய் ( நெய் )
தோசையின் மீது விட்டு  திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து சட்னி, சாம்பாருடன் பரிமாறலாம். அருமையான சுவையான காரசாரமான பொடி தோசை ரெடி.

 


புளிப்பொங்கல் நான் செய்தேன் நன்றாக இருந்தது மகி. எனக்கு இனிப்பு என்றால் ம்ம்ம்ம் ரொம்ப  பிடிக்கும் ... அதிலையும் இது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. புளிப்புடன் கூடிய இனிப்பு சேர்ந்து ரொம்ப நல்லா இருந்தது.மிக்க நன்றி மகி.

ஆனால் நான் புழுங்கல் அரிசி,  நல்லெண்ணெய் ஊற்றாமல் சாதா எண்ணெயில்தான் செய்தேன் அதுவும் நன்றாக இருந்தது புதுமையாக.
இதோ நான் செய்த புளிப்பொங்கல்.


  செய்முறை இதை கிளிக் செய்யுங்கள் : http://mahikitchen.blogspot.in/2013/04/blog-post_9.html

Wednesday, May 1, 2013

மே தின வாழ்த்துக்கள்


அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்