VijiParthi
For Healthy & Happy Housekeeping !!!
Monday, December 9, 2013
Wednesday, September 25, 2013
அன்னாசி பழ அல்வா - PINEAPPLE HALWA
தேவையான பொருட்கள்:
அன்னாசி பழம் அரைத்தது - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
நெய் - 3 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 6
பாதாம் பருப்பு - 4
செய்முறை:
நன்கு பழுத்த அன்னாசி பழத்தை தோல் நீக்கிவிட்டு நறுக்கி தேவையானதை எடுத்து மிக்சியில் அரைத்து வைத்து கொள்ளவும்.
மேற்சொன்ன பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைக்கவும்.
நான்ஸ்டிக் பானில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் நறுக்கிய முந்திரி, பாதாம் பருப்பையும் லேசாக பொரித்து தனியாக எடுத்துவைக்கவும். பின்னர் அதே பானில் இருக்கும் நெய்யுடன் இன்னும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து காய்ந்ததும்
அரைத்த பைனாப்பிள் விழுதை சேர்த்து கிளறவும்.
மிதமான சூட்டில் இருக்கவேண்டும் கைவிடாமல் கிளறவும் பின்
சீனியை சேர்த்து சிறிது ஹல்வா கலர் பவுடர் சேர்த்து கிளறி அதனுடன் ஒரு ஸ்பூன் நெய், பொரித்தெடுத்த பருப்பையும் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி இறக்கி ஒரு பிளேட்டில் கொஞ்சம் நெய்தடவி அல்வாவை அதில் வைத்து லேசாக நெய்தடவி சிறிது மீதமுள்ள பருப்பை வைத்து தேவையான வடிவில் நறுக்கி பரிமாறலாம். அன்னாசி பழ அல்வா ரெடி.
Wednesday, August 14, 2013
உல்லன் பர்ஸ் ( கொக்கிப்பின்னல் ) -CROCHET PURSE
வணக்கம் .... வெகு நாட்களாக வலைத்தளத்திற்கு வரமுடியவில்லை ... என்னுடைய கணிப்பொறிக்கு சிறிது நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தொடர இயலவில்லை ... இப்பொழுதும் நான் எடுத்த ( கிளிக்கிய)
படங்களையும் எடுக்கமுடியவில்லை.....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....
இப்பொழுது நான் பின்னிய உல்லன் பர்ஸ் இதோ உங்கள் பார்வைக்கு ... எப்படி இருக்கு என்று தங்களின் கருத்துக்கள் மூலமாக கூறுங்கள்... மேலும் உல்லன் தையல் தைக்க தெரிந்தவர்கள் எனக்கு கொஞ்சம் சொல்லித்தாருங்கள் ... ஏனென்றால் எனக்கு இதைப்பற்றி தெரியாது... ஆனால் இணையத்தின் மூலமாக நான் கற்றுக்கொண்டேன் .... அது எனக்கு ரொம்ப பிடிக்கும் .....
உல்லன் தையல் பர்ஸ்... இது நான் வேறு ஒன்றுக்கு செய்தேன் ஆனால் அது வரவில்லை ... உடனே அதை பர்ஸ்சாக மாற்றிவிட்டேன் . இது தாங்க இதனுடைய கதை....
Thursday, May 9, 2013
வெண்டைக்காய் மோர் குழம்பு - Lady fingers Butter Sauce
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் -10
மோர் - 1 கப்
மிளகாய் - 4 ( காரத்து கேற்ப )
தேங்காய் - 2 (3) டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மோர் மிளகாய் - 3
எண்ணெய் - தாளிக்க
கடுகு, உளுந்து - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை , கொத்தமல்லி இலை - சிறிது
செய்முறை:
முதலில் மிளகாய், தேங்காய், சீரகம் முதலியவைகளை அரைத்து மோருடன் சேர்த்து நன்றாக கரைத்து வைக்கவும் ( மோரை நன்றாக மத்தால் கடைந்து வைக்கவும் ).
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து,கருவேப்பிலை , மோர் மிளகாய் சேர்த்து தாளித்து அதனுடன் வெண்டைக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும். வெண்டைகாய் நன்றாக வதங்கிய பின் மோர் கலவையை சேர்த்து சிறிது நேரத்திற்கு பின் கொதிவருவதர்க்கு முன் இறக்கி கொத்தமல்லி இலையை தூவி விடவும். கோடைக்கு ஏற்ற வெண்டைக்காய் மோர் குழம்பு தயார்.
மோர் குழம்பு உடலுக்கு மிகவும் நல்லது. உருளைக்கிழங்கு, வாழைக்காய் வறுவல் , அப்பளத்துடன் ம்ம்ம்ம் சுவையாக இருக்கும் .
Subscribe to:
Posts (Atom)