Tuesday, April 30, 2013

ரவா கேசரி - Rava Kesari





தேவையான பொருட்கள் :

ரவா - 1 டம்ளர்
தண்ணீர் - 4 டம்ளர்
சக்கரை   - 1 1/2 டம்ளர் (1)
திராட்சை - 12
முந்திரி பருப்பு - 8
நெய் - 5 டீஸ்பூன்
ஏலக்காய் - 3
கலர் பவுடர் - சிறிது
உப்பு - 1/4 டீஸ்பூன் 

செய்முறை:


ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்கவைக்கவும். கொதித்தபின் வருத்த ரவையை  சேர்க்கவும் கட்டிபடாமல் கிளறிவிடவும் . சிறிது உப்பு சேர்க்கவும் . தீ மிதமான பதத்தில் இருக்கட்டும்.


ரவை  நன்றாக சுருண்டு வெந்தவுடன் சர்க்கரையை  சேர்த்து கிளறவும் அதனுடன் ஏலக்காய் பொடி , சிறிது  கலர் பவுடர் ( சிறிது சுடு நீரில் கரைத்து சேர்க்கவும் ) நன்றாக கிளறி விடவும்.

 

கடாயில் நெய்விட்டு முந்திரி, திராட்சையை பொரித்து அதனுடன் சேர்த்து கிளறிவிட்டு இறக்கி வைக்கவும். இறக்கிவைத்து பரிமாறலாம் சுவையான இனிப்பான கேசரி ரெடி.

 

கேசரி ஆறியபின்னரே மிகவும் சுவையாகவும், எடுத்து சாப்பிட
அருமையாகவும்   இருக்கும். வாங்க எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக ரவா  கேசரி ரெடி .

குறிப்பு :

கலர் பொடியை  சிறிது சுடு நீரில் கரைத்து சேர்க்கவும் அல்லது தண்ணீர் கொதிக்கும் பொழுது சேர்க்கவும். தூவினால் திட்டு திட்டாக இருக்கும்.





Saturday, April 27, 2013

அன்னாசிப் பழ கேசரி - PINEAPPLE KESARI





தேவையான பொருட்கள் :

ரவா - 1 கப் ( வறுத்தது )
ஜீனி - 3/4 கப்
அன்னாசிப்  பழம் - 1 கப்  ( பொடியாகா   நறுக்கியது )
முந்திரி பருப்பு - 6
உலர் திராட்சை -7
தண்ணீர் - 3 கப்
நெய் - 3 டீஸ்பூன் 

செய்முறை:

 நான்ஸ்டிக் பானில் தண்ணீர் ஊற்றி அடிப்பில் வைத்து கொதிவந்தவுடன் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ரவாவை  லேசகா தூவிகொண்டே  கிளறிவிடவும்  ( கட்டிபடாமல் ). ஓரளவு ரவை வெந்து வந்தவுடன் ஜீனியை கொட்டி கிளறவும்.



பின் அதனுடன் நறுக்கிய அன்னாசிப் பழத்தை சேர்த்து கிளறிவிடவும். நன்றாக வெந்தவுடன்  ( சிறிதுநேரத்தில் ) இரண்டு  ஸ்பூன் நெய் விட்டு கிளறவும்.



பின் தனியாக ஒரு  டீஸ்பூன் நெய்விட்டு முந்திரி , திராட்சை பொரித்து அதனுடன் கலந்து விடவும். அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு சுவையான அன்னாசிப்  பழ கேசரி ரெடி.





 இனிப்புடன் அன்னாசி பழ சுவை சேர்ந்து மிகவும் அருமையான கேசரி தயார்.


குறிப்பு:

அன்னாசிப்பழ சுவைக்கு ஏற்றவாறு இனிப்பு சேர்த்துக்கொள்ளவும். கலர் தேவையெனில் சேர்த்துக்கொள்ளலாம். அன்னாசி பழத்தை அரைத்தும் செய்யலாம்.

Monday, April 22, 2013

ஈசி உருளைக்கிழங்கு வறுவல் - EASY POTATO FRY



தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு  - 100 கிராம்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் (அல்லது)  தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு  - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது 


செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை கழுவி தோல் நீக்கி ( அல்லது) தோலுடன் சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் கொஞ்சம் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை பொரிந்த பின்னர் நறுக்கிய உருளைக்கிழங்கு,  உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.



 பின்  மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்  மிதமான சூட்டில் இருப்பதே நல்லது. பின்பு கொஞ்சம் தேவைப்பட்டால் எண்ணெய் லேசாக  சேர்த்து வதக்கலாம். கிழங்கு வெந்தவுடன் (வதங்கியவுடன்) இறக்கி விடலாம். மிக மிக ஈசியான உருளைக்கிழங்கு வறுவல் ரெடி.


 சாம்பார் சாதம், தயிர் சாதம், பீட்ரூட் சாதம் என்று அனைத்திற்குமே காரசாரமாக இருக்கும்.


 

குறிப்பு: 

தண்ணீர் தேவையில்லை , மிதமான சூட்டில் இருக்க வேண்டும். மூடி போட்டு பிரட்டிவிடலாம்.

 

Thursday, April 18, 2013

CROCHET CAP - கொக்கிப்பின்னல்

 கொக்கிப்பின்னல் நான் எடுத்த இரண்டாவது முயற்ச்சி இது. கொஞ்சம் இணையத்தளத்தின் ( You Tube ) மூலமாக இரண்டு அடுக்குகள் கற்கொண்டு பின்பு நானாக செய்து முடித்துள்ளேன் .  அதனை என் உறவுகளாகிய உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

 


உல்லன் தையல் மூலம் நான் இதை செய்துவிட்டேன் என்ற சந்தோஷத்துடன் பகிர்கிறேன்...


 தொப்பியின் பின்புறம் 


தொப்பியின் முன்புறம்  

Sunday, April 14, 2013

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

                    அனைவருக்கும் என்னுடைய  இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வாங்க இனிப்பு சாப்பிடுங்க 








Monday, April 8, 2013

உல்லன் தையல் - CROCHET

 மொபைல் கவர்


உல்லன் தையல்  முதலில் ஆசையில் நூல் வாங்கி வந்து விட்டேன் . ஆனால் என்ன செய்வது எப்படி செய்வது என்றே தெரியவில்லை .....
பின் யூட்டூப் பார்த்து ஒரு தையல் கற்றேன். அதனை வைத்து செய்ததுதான் இது.



இது நான் சும்மா சுற்றி சுற்றி தைத்து வந்தது  இதற்க்கு சரியாக இருந்தது . சரி பரவாஇல்லை சட்டை இல்லாமல் இருக்கிறது என்று கொடுத்து விட்டேன்.
 






Friday, April 5, 2013

பேப்பர் பேனா ஸ்டான்ட் - PEN STAND


பேப்பர் பேனா ஸ்டான்ட் எப்படி இருக்கு உறவுகளே ... நான் ஒருநாள் தண்ணீர் கிளாஸ் வாங்கிவந்தேன் ... அப்பொழுதே தண்ணீர் பருகிவிட்டு வைக்கும் பொழுது கீழே விழுந்துவிட்டது... அவ்வளவுதான் அப்படியே வருத்ததுடன்  வந்து  உட்கார்ந்து விட்டேன் . அய்யூஊஊஊஒ .....



என்னவர்  பரவாஇல்லைப்பா  கண்ணாடி என்றால் உடையும்தான்.... என்றனர். அதன் பின்தான் பார்த்தேன் ஒரே ஒரு இடத்தில் மேலிருந்து நடுப்பகுதி வரைக்கும் தெரித்துருந்தது . பின்னர் ஒரு இடத்தில் வைத்திருந்தேன் ( தூக்கிப் போடாமல்)....


அப்பொழுதான் இணையத்தில்  வீடியோ பார்த்தேன் பின்பு .....
அதன் மூலமாகத்தான் நான் நினைத்தேன் குப்பையில் போடும் ஒரு கோப்பையை இப்படி செய்யலாம் என்று... செய்தேன்...  அதை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் .....


Thursday, April 4, 2013

பூத்தையல் - EMBROIDERY



நான் தைத்த பூத்தையல்    



 எனக்கு  பூத்தையல் மீது மிகவும் ஆர்வம் உண்டு. ஆனால் இப்பொழுதுதான் அதனை செயல்படுத்த முற்பட்டுள்ளேன். நான் படித்தது இல்லை ...



ஆனால் எனக்கு என் அத்தை ஒரு நாள்  இது தான் சங்கிலி தையல், காம்பு தையல் , .......,  சொன்னார்கள். அதுவும் எப்பொழுது தெரியுமா என்னுடைய திருமணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக.... ஹிஹிஹி.... அந்த நேரத்தில் எனக்கு ஒன்ருமே புரியவில்லை.... இப்பொழுது முயற்சி செயலாம் என்ற எண்ணம் வந்தது.....  செய்துள்ளேன்......




பூத்தையல்   தெரிந்தவர்கள் எனக்கு இதைபற்றிய விளக்கத்தை தெரிவிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.....




Wednesday, April 3, 2013

வாழைக்காய் பொடிமாஸ் - PLANTAIN POTIMAS

தேவையான பொருட்கள்:
வாழைக்காய்  -  2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
சோம்பு - 1/2 ஸ்பூன் 
கடுகு - 1 ஸ்பூன்  
கருவேப்பிலை - சிறிது 
எண்ணெய் - 2 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
கொத்தமல்லி இலை - சிறிது 



செய்முறை: 


           தோல் நீக்கிய   வாழைக்காயுடன்  தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து   பிசைந்து வைக்கவும்.  வெங்காயத்தை 
பொடியாக நறுக்கிகொள்ளவும். பச்சை மிளகாயை நீட்டுவாக்கில் வகுந்து வைத்து , சோம்பு  நுனிக்கிகொள்ளவும்.



கடாயில் எண்ணெய் விட்டு சூடான பின் கடுகு, நுனிக்கிய  சோம்பு போட்டு பொரிந்த பின் கருவேப்பிலை சேர்க்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் உப்பு சேர்த்து  பிரட்டி விடவும்.  பின்னர்  வேகவைத்து பிசைந்து வைத்துள்ள வாழைக்காயை  சேர்த்து நன்றாக பிரட்டி விடவும். 










அடுப்பை மிதமான சூட்டி வைத்து சிறிது நேரம் பிரட்டி விட்டு இறக்கவும் .  வாழைக்காய்  பொடிமாஸ் ரெடி


வாழைக்காயின் மருத்துவ பயன்கள்:
 
  • வாழைக்காய் அதிகம் சத்துள்ளதால்  உடல் பருமன் அடையும்.

  •  வாழைக்காயில் மாவுச்சத்து, இரும்புச்சத்து  இருக்கிறது. அதனால் நல்ல வளர்ச்சிக்கும் உதவும்.

  • வாழைப்பழம், வாழைக்காய் சாப்பிட்டால் பசி அடங்கும் .

  •  வாழைக்காயில் மேல் தோல் எடுத்துவிட்டு உட்புறத் தோலுடன் சமைத்து உண்பதனால் தோலிலுள்ள சத்துக்கள் நம் உடலில் சேரும்.


  • வாய்வு தொல்லை இருப்பவர்கள் வாழைக்காய் சாப்பிடுவதை குறைத்துக்கொள்வது நல்லது.   

Tuesday, April 2, 2013

அவல் உப்மா - POHA UPMA


தேவையான பொருட்கள்:

அவல்             -       100 கிராம்
பெரிய வெங்காயம் - 1
மஞ்சள் தூள்    -   1/2 டீஸ்பூன்
கடுகு              -      1 டீஸ்பூன்
காய்ந்த/பச்சை  மிளகாய் - 3
ஜீனி       -    1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை  - சிறிது
உப்பு                 -   தேவையான அளவு
எண்ணெய்  -  2 டேபிள் ஸ்பூன் 
கொத்தமல்லி இலை - சிறிது

செய்முறை:

முதலில்  கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும், மிளகாய் கிள்ளி  போடவும், கறிவேப்பிள்ளை வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


அதேநேரத்தில் அவலில் தண்ணீர் ஊற்றி வடிகட்டவும் ( வடிகட்டிய பின் சிறிது தண்ணீரில் 2 நிமிடம் ஊறட்டும் ) .








வெங்காயம் வதங்கியவுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி விடவும். பின் ஊறிய ( வடிகட்டிய ) அவுலை  சேர்த்து கிளறிவிடவும். பின் சீனியை தூவி பிரட்டி இறக்கி மல்லிதழை சேர்த்து பரிமாறலாம். அவல்  உப்மா   ரெடி.



குறிப்பு:

              அவல் கழுவி வடிகட்டும் போது அதிகம் தண்ணீர் இருக்க வேண்டாம் . அவல் ரொம்ப கொழகொழப்பாக ஆகிவிடும். 

அவல் பயன்கள்:

  • அவல் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
  •  அவலை ஊறவைத்து காலையிலும் , மாலையிலும் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும் .


Monday, April 1, 2013

கோதுமை ரொட்டி - WHEAT ROTI


தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப் 

துருவிய தேங்காய் பூ - 3 டேபிள் ஸ்பூன் 

உப்பு  -  தேவையான அளவு 

எண்ணெய் - 2 ஸ்பூன் 


செய்முறை  :
           கோதுமை மாவை ஒரு அகன்ற பத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

அதனுடன் தேவையான அளவு உப்பு  ,  துருவிய தேங்காயை சேர்த்து
 தண்ணீர்  ஊற்றி பிசைந்து (கொஞ்சம் இலவளகா ) வைக்கவும்.
 




 தோசைகல்லை அடுப்பில் வைத்து சூடு வந்த உடன் ( அடுப்பை சிம்மில்  வைத்து) சிறிது எண்ணெய் விட்டு பிசைந்த கோதுமை மாவை எடுத்து கையினால் தண்ணீர் தொட்டுக்கொண்டு லேசாக நமக்கு தேவையான  அளவில்  தட்டி விடவும்.

                                                                                                                                                         

சிறிது நேரத்திற்கு பின்  ஒருபுறம் சிவந்தவுடன், மறுபுறம் திருப்பி விடவும். தேவையெனில் சிறிது எண்ணெய் விடலாம் . 


 
வெந்தவுடன்   எடுத்து  பரிமாறலாம்.. சுவையான கோதுமை ரொட்டி ரெடி.