Friday, March 29, 2013

அவரைக்காய் பொரியல்



தேவையான பொருட்கள் :

அவரைக்காய் -150 கிராம்

கடலைப்பருப்பு   -  1 டீஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1

கடுகு   -   1  டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 3

கருவேப்பிலை  - சிறிது

எண்ணெய்  - தாளிக்க 

உப்பு         -  தேவையான அளவு

செய்முறை :


                                       

           முதலில் அவரைக்காயை கழுவி சுத்தம் செய்து சிறிது சிறிதாக
நறுக்கிகொள்ளவும். அதேபோல் வெங்காயத்தையும் நறுக்கி வைக்கவும்.



கடாயில்  எண்ணெய் விட்டு கடுகு போட்டு பொரிந்ததும், கடலைப்பருப்பு போடவும், காய்ந்தமிளகாய்  கிள்ளி  போட்டு  சிவந்த  பின்  வெங்காயம், கருவேப்பிலை , சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.



                           
     வதங்கிய பின்னர் அவரைக்காயை சேர்த்து வதக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சநேரம் வதக்கவும். பின்னர் அடுப்பை குறைந்த தீயில் வைத்து,   மூடி போட்டு வேகவிடவும் இரண்டு ,  மூன்று முறை பிரட்டி  விட்டு
( அடி பிடிக்காமல் ) வேகவிடவும்.  வெந்தவுடன்  இறக்கி பரிமாறலாம். அவரைக்காய் பொரியல் ரெடி.




குறிப்பு:

அவரைக்காய் பொரியலில் நான் தண்ணீர் சேர்க்கவே இல்லை .விரும்பினால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம் .

கடலைப்பருப்பு எண்ணெய்யில்  பொறிந்து இருப்பதால் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.

அவரைக்காயின் பயன்கள்:


  • அவரைக்காய் எளிதில் ஜீரணமாகும் தன்மை உள்ளதால் இதன் சத்துக்கள் விரைவில் நம் உடலில் சேரும்.                                                                                       
  • இதில் துவர்ப்பு தன்மை உள்ளதால் இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்த நாளங்களிலுள்ள கொழுப்பைக் குறைக்கும் .
  • அவரைக்காயை அதிகம் உணவில்  இதய நோய்,  இரத்த அழுத்தம் உள்ளவர்கள்  சேர்த்துக்கொள்வது மகவும் நல்லது....


Friday, March 8, 2013

மகளீர் தின நல்வாழ்த்துக்கள்



அனைவருக்கும் மகளீர் தின நல்வாழ்த்துக்கள். 



இம்மலர்கொத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் 



                                             வாழ்த்துக்கள்......... வாழ்த்துக்கள்



அனைவரின் நலமறிய ஆவல். நீண்ட நாட்களுக்கு பின் இன்று நம் உறவுகளை 

சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி . அதுவும் மகளீர் தினத்தில் சந்திப்பது 

பெருமகிழ்ச்சி....